Monday, April 13, 2009

மோதல் தவிர்ப்பை ஊதாசீனம் செய்யும் புலிகள். ஸ்னைப்பர் தாக்குதலில் படையினர் பலி.



சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் ஒருதலைப்பட்டசமான மோதல் தவிர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலயங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மோதல் தவிர்பு அறிவிப்பு புலிகளால் உதாசீனப்படுத்தப்படுவதாக வன்னி படைத்தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

புலிகள் இன்று காலை 9.00 மணியளவில் புதுக்குடியிருப்பு முன்னரங்குகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள படையினர் மீது புதுமாத்தளன் யுத்த சூனியப் பிரதேசத்திலிருந்து புலிகள் மேற்கொண்ட ஸ்னைப்பர் தாக்குதலில் 1 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் மேலும் ஒருவர் காமடைந்துள்ளதாக படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் அரசாங்கம் மோதல் தவிர்ப்பு அறிவித்து 6 மணிநேரங்களில் புத்தள பிரதேசத்தில் உள்ள எல்லைக்கிராமம் ஒன்றினுள் புகுந்த புலிகள் அங்குள்ள பொதுமக்களை வெட்டியும் குத்தியும் கொலைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment