இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சார்பாக அம்பாறை மாவட்டம் எங்கும் அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.
வன்னியில் புலிகளின் பிடியில் சிக்குண்டு பல சிரமங்களைச் சந்தித்து தப்பி வந்துள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டியதன் அவசியம் ஒலிபெருக்கி மூலம் அம்பாறை மாவட்டம் எங்கும் அறிவிக்கப்படுவதுடன் அத்தியாவசியப் பொருட்களும் சேகரிக்கப்படுகின்றது.
நேற்றும் இன்றும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள், பொதுமக்களின் சங்கங்கள், ஆலயநிர்வாகங்கள் போன்றன அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் இனியபாரதி தலைமையில் இப்பணியை முன்னெடுத்து வருகின்றனர். இன்று சேகரிக்ப்பட்ட பொருட்கள் இன்றிரவு பார ஊர்திகள் மூலம் அனுப்பி வைக்கப்டவுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment