Thursday, April 16, 2009

சுவிஸ் புலிகளின் கொள்கை பரப்புரைப் பொறுப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் உண்ணாவிரதம் பற்றிய அம்பலத்திற்கு வராத திடுக்கிடும் உண்மைகள்..!!


சுவிஸ் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் இலங்கையில் போர்நிறுத்தம் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்திருந்தார். நேற்றுக்காலை 9மணியளவில் அங்கு சென்ற சுவிஸ் பொலீசார் அவரை அவ்விடத்தைவிட்டு அகன்று செல்லுமாறு தெரிவித்தனர். பிற்பகல் அங்கு மீண்டும் சென்ற பொலீசார் இவரது உண்ணாவிரதப் போராட்ட அனுமதியை மீளப்பெறுவதாகவும், எனவே அங்கிருந்து அகன்று செல்லுமாறும் பணித்தனர். இதனையடுத்து அங்கிருந்த ஆதரவாளர்கள் சிலருடன் அகன்று சென்ற கிருஸ்ணா, சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் அரசியல்பிரிவு செயலக பிரதான வாயிலில் அமர்ந்து உண்ணாவிரதத்தை மீண்டும் ஆரம்பித்தார். இதனைக் கண்ணுற்ற சுவிஸ் வெளிவிகார அமைச்சின் அரசியல் பிரிவு அதிகாரிகள் இவரை அமைச்சின் அலுவலக கட்டிடத்திற்கு அழைத்து இவரது போராட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சுவிஸ் பொலீசார் பஸ், ரயில் போக்குவரத்துக்கு இது தடையாக அமைகிறதென்று தெரிவித்து, அவரை வெளியேறுமாறு தெரிவித்துள்ளனர். அத்துடன் வேறிடத்தில் சென்று போராட்டம் நடத்துமாறும் கூறியுள்ளனர் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயினும் கிருஸ்ணாவின் உண்ணாவிரதம் மற்றும் அவரை பொலீசார் வெளியேற்றியமை உள்ளிட்ட விடயங்களின் உண்மைத் தகவல்கள் பின்வருமாறு,..

முதலில் கிருஸ்ணா அம்பலவாணர் என்பவர் சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் மட்டும் அல்ல. அவர் சுவிஸ் புலிகளின் கொள்கை பரப்புரைப் பொறுப்பாளராவார். புலிகளைக் காப்பாற்றும் யுத்தநிறுத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இவர் உண்ணாவிரதமிருந்த இடமான சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்திற்கு அருகிலுள்ள சதுக்கத்திற்கு நேற்றுக்காலை 9மணியளவில் சென்ற சுவிஸ் பொலீசார், இவரை உடனடியாக அவ்விடத்தை விட்டு அகலுமாறு தெரிவித்தனர். தாம் உரிய அனுமதி பெற்றே உண்ணாவிரதம் இருப்பதாக கிருஸ்ணா உள்ளிட்டோர் முதலில் வாதிட்டனர். பின்னர் அங்கிருந்து அகன்று பிற்பகல் 1மணியளவில் அவ்விடத்திற்கு சென்ற சுவிஸ் பொலீசார், உங்களுக்கு தரப்பட்ட இந்த அனுமதியை இரத்துச் செய்கிறோம். உடனடியாக இவ்விடத்தை விட்டு அகன்று செல்ல வேண்டுமென்றும் இல்லாவிடில் கைது செய்ய நேரிடுமெனவும் தெரிவித்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

இதனையடுத்து கிருஸ்ணா 20, 30பேருடன் அங்கிருந்து சென்று சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் அரசியல் செயலக பிரதான வாசலில் தனிஒருவராக அமர்ந்து உண்ணாவிரம் இருந்தார். இதனைத் தொடர்ந்து பிற்பகல் 5மணியளவில் அங்கு சென்ற சுவிஸ் பொலீசார், இங்கும் நீங்கள் உண்ணாவிரதம் இருக்க முடியாது, உடனடியாக இவ்விடத்தினை விட்டு அகன்று செல்லுங்கள் என்றுகூறி இவர்களை அங்கிருந்து துரத்தினர். இதனையடுத்து மாலை 5மணியளவில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் புலிகள் சார்பான பேர்ண் முருகன் கோவிலுக்கு 20, 30பேருடன் சென்ற கிருஸ்ணா, அங்கு தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அன்றிரவு 8மணியளவில் பேர்ண் முருகன் கோயிலுக்குள் திடீரென புகுந்த சுவிஸ் பொலீசார், கிருஸ்ணாவை பலாத்காரமாக இழுத்து அம்புலன்ஸில் ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு அனுமதித்து சேலைன் ஏற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சுவிஸ் பொலீசார் விடுத்துள்ள அறிவித்தலில், புலிகள், புலி ஆதரவாளர்கள், புலிசார்பு தமிழ் இளைஞர்கள் சுவிஸ் பாராளுமன்றத்திற்கு முன்பாக இதற்கு முன்னர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்பவற்றை மேற்கொள்ளும் போது அங்கு செல்லும் பஸ்களையும், வாகனங்களையும் மறித்து பல்வேறு அடாவடிகளிலும் ஈடுபட்டு வந்தனர். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீங்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டுமானால் ஒதுக்குப்புறமாக எங்காவது வைத்துக் கொள்ளுங்கள். சுவிஸில் இவ்வாறான அடாவடிகளில் ஈடுபட வேண்டாம். உங்களுக்கு வேண்டுமானால் இவ்வாறான உண்ணாவிரதங்களையும், அடாவடிகளையும் இலங்கையில் போய் செய்து கொள்ளுங்கள். சுவிஸில் உங்கள் அடாவடிகள் வேண்டாம். சுவிஸின் அமைதிக்கும், இயல்பு வாழ்க்கைக்கும் குந்தகம் விளைவிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை உண்ணாவிரதம் இருந்த போது கிருஸ்ணா அம்பலவாணரை சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சந்தித்ததாக கூறப்படுவதிலும் எவ்வித உண்மையும் இல்லையென்று தெரிகிறது. வெளிவிவகார அமைச்சின் எந்தவொரு அதிகாரியோ, பிரதிநிதிகளோ இவரைச் சந்திக்கவில்லை. அங்கு கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் சிலரே அவ்விடத்திலிருந்து அகன்று செல்லுமாறு இவரைப் பணித்துள்ளனர். அதனையே வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சந்தித்து உண்ணாவிரதம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஊடகச் செய்திகள் திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளன. இதுவே அங்கு உண்மையில் நடந்த விடயமாகும்.
தகவல்.. உமாதாஸன் -சுவிஸ்

Thanks Athirady.com





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com