Thursday, April 16, 2009

அத்வானி மீது செருப்பு வீச்சு



மத்தியப் பிரதேசத்தில் வியாழக்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீது, கட்சியின் முன்னாள் நிர்வாகி ஒருவர் செருப்பு வீசினார். நல்லவேளையாக செருப்பு அவர் மீது படாமல் அருகில் விழுந்தது.

கூட்ட மேடைக்கு அத்வானி வந்த சிறிது நேரத்தில், கூட்டத்தில் உட்கார்ந்திருந்த கட்னி மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் பவஸ் அகர்வால் என்பவர், திடீரென அத்வானி மீது கோபத்துடன் செருப்பு வீசினார். இந்த சம்பவத்துக்குப் பிறகு அகர்வாலை, மேடைக்குப் பின்புறம் அழைத்துச் சென்ற போலீஸôர் பின்னர் அவரை அங்கிருந்த அழைத்துச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தால் மேடை அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோஷ்டி பூசல் காரணமாக கட்சியின் மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து அகர்வால் நீக்கப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட கோபத்தில் அகர்வால் இவ்வாறு செய்ததாகவும் போலீஸôர் பின்னர் தெரிவித்தனர்.

சிதம்பரத்தைத் தொடர்ந்து... மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அண்மையில் தில்லியில் நிருபர் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, நிருபர் ஒருவர் அவர் மீது ஷுவை வீசினார். அதைத்தொடர்ந்து குருஷேத்திராவில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் ஜிண்டால் மீது, கூட்டத்தில் இருந்த ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் செருப்பு வீசினார்.
இவ்வாறு அரசியல் தலைவர்கள் மீது செருப்பு வீசும் சம்பவம் அடிக்கடி நடைபெறுவது அண்மைக்காலங்களில் வாடிக்கையாகிவிட்டது................................

No comments:

Post a Comment