Monday, April 27, 2009

பிரபாகரன் தப்பிச்செல்லாதவாறு இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பு பன்மடங்காக்கப்படுகின்றது.

புலிகளியக்கத்தில் இருந்து தப்பி வந்த அவ்வியக்கத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்ரர் இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கிய தகவல் மற்றும் இராணுவப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் பிரபாகரன் சப்மரைன்களின் உதவியுடன் தப்பிச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக இந்திய எல்லைப் பிரதேசங்களான தமிழ் நாடு மற்றும் ஏனைய கரையோரப் பிரதேசங்களில் பாதுகாப்பு பன்மடங்காக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து இந்தியாவைச் சென்றடையும் ஒவ்வொரு அகதிகளையும் பல கோணங்களில் விசாரணை செய்யுமாறும் அவர்களின் சகல அசைவுகளையும் கண்காணிக்குமாறும் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் உள்துறை அமைச்சு சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு உரிய பிதேசங்களில் படையினரின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க பணித்துள்ளதாகவும் கரையோரப் பிரதேசத்தில் உள்ள சகல பிரிவுகளையும் சேர்ந்த பாதுகாப்புப் படையினரையும் உசார் நிலையில் இருக்குமாறு பணித்துள்தாகவும் தெரியவருகின்றது.

பிரபாகரனும் அவரது தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்களும் தப்பி ஓட முற்படும் போது இந்தியாவில் தங்கியுள்ள அகதிகள் பிளையான வழிக்குச் செல்லாமல் தடுப்பதற்காக ஒவ்வொரு முகாம்களையும் விசேட கண்காணிப்புக்கு உட்படுத்துமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment