Monday, April 27, 2009

மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்



மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்திருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தும் கனரக ஆயுதங்கள், போர்விமானங்கள் பயன்படுத்தப்படாது எனவும், மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக்கொண்டுவரத் தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எமது பாதுகாப்புப் படையினர் பொதுமக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தும் கனரக ஆயுதங்கள் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தமாட்டார்கள்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்துக் கவனம் செலுத்தியிருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதிகளை நோக்கி கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியோ அல்லது விமானங்களைப் பயன்படுத்தியோ தாக்குதல்கள் நடத்தப்படாது என இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருப்பதாக இந்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

எனினும், பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடருமென இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதாகவும் இந்திய உட்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

நன்றி ஐஎன்எல்

No comments:

Post a Comment