ஜனாதிபதி - இந்தியப் பிரமுகர்கள் சந்திப்பில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் அபிவிருத்தி தொடர்பாக பேசப்பட்டது.
நேற்றுக்காலை கொழும்பை வந்தடைந்த இந்திய அரசின் பிரமுகர்கள் நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இந்திய பாதுகாப்பு ஆலோசர் எம்.கே. நாராயணன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோ பிரசாத் ஆகியோரும் இலங்கை பாதுகாப்பமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் போது இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. புலிகளின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ள மக்களது அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு முன்னெடுக்கவுள்ள விசேட செயற்திட்டம் ஒன்று தொடர்பான திட்டமிடல் அங்கு இடம்பெற்றதாக நம்பகமாகத் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment