இலங்கை விவகாரம் தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்து பேசி வருகின்றது.
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களது விடயங்கள் தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்து பேசிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நேற்றுக்காலை அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளனர். இக்கருத்தரங்கில் அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்காசிய நாட்டு விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் ரிச்சார்ட் பௌசர் கலந்து கொண்டுள்ளார்.
இக்கருத்தரங்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபேர்ட் வூட், இலங்கை அரசு புத்தாண்டை முன்னிட்டு யுத்தத்திற்கு கொடுத்திருக்கின்ற 48 மணி நேர ஓய்வை இணைத்தலைமை நாடுகள் வரவேற்பதாகவும் அதே நேரத்தில் இருதரப்பும் அங்கு சிக்கியுள்ள மக்களின் அடிப்படை தேவை விடயங்களில் கவனம் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து வகைகள் அவர்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதுடன் அங்கு காயமடைந்துள்ள மக்கள் சிகிச்சைக்காக வெளியேற இருதரப்பும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன் வன்னியில் சிக்கியுள்ள மக்களை அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் என அவர்கள் மீண்டும் கேட்டுள்ளனர் எனவும் இலங்கை விடயங்கள் தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நாடாத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment