புலிகளின் பிரதான வைத்தியர் ஒருவர் படையினரிடம் சரண்-
கடந்த 20 ம் திகதி புலிகளின் தடையை உடைத்துக்கொண்டு வெளியேறிய மக்களுடன் அமுதன் என அழைக்கப்படும் வைத்தியர் ஒருவரும் வெளியேறி படையினரிடம் சரணடைந்துள்ளதாக தெரியவருகின்றது. புலிகளின் சிரேஸ்ட உறுப்பினரான இவர் புலிகளின் முன்னணித் தளபதிகளுக்கான விசேட வைத்தியராக செயற்பட்டு வந்ததாக படையினரிடம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் முனைகளில் நின்று கடமையாற்றி வந்த அவர் தொடர்ந்தும் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து அவ்வியக்கத்தில் இருந்து வெளியேறியதாகவும் தான் களத்தில் உயிர்நீத்திருந்தால் புலிகளின் தலைவரால் கேணல் தரம் வழங்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment