Saturday, April 25, 2009

புலிகளை மூன்றாம் தரப்பிடம் சரணடைய கோரும் அமெரிக்கா. அவசியமில்லை என்கின்றார் கோத்தபாய.



புலிகள் ஆயதங்களை கீழே போட்டு மூன்றாம் தரப்பிடம் சரணடையவேண்டும் என அமெரிக்க புலிகளை கேட்டுள்ளதுடன் இலங்கை அரசும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளது.

அமெரிக்காவின் மேற்படி வேண்டுகோள் தொடர்பாக ஊடகவிலாளர்களுடன் பேசிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்கழத்தின் பேச்சாளர் றொபேர்ட் வூட், இலங்கையில் இடம்பெறுகின்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் முகமாக இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்தும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களை தடுத்து வைத்துக்கொள்வதை கைவிட்டு அவர்களுக்கு தொடர்ந்தும் துயரங்களைக் கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும்.

யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வெளியேறியிருந்தாலும் அங்கு சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களையிட்டு அமெரிக்கா ஆழ்ந்த கவலைகொண்டுள்ளது. அங்கு பல மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளார்கள் எனவே புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு முன்றாம் தரப்பொன்றிடம் சரணடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை பாதுகாப்பமைச்சின் செயலர் கோத்தபாய, இலங்கையால் பயங்கரவாதத்தை கையாள முடியும். புலிகளின் தளபதிகள் மூன்றாம் தரப்பொன்றிடம் சரணடைய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment