Monday, April 13, 2009

கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் புத்தாண்டுச் செய்தி




இனமத பேதங்களற்ற ஐக்கிய இலங்கைத் திருநாட்டை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் இச் சித்திரைப் புத்தாண்டில் திடசங்கர்ப்பம் பூணுவோம்.

தமிழ் சிங்கள வேறுகாடுகளைக் கடந்து எல்லா மக்களும் இலங்கையில் ஒருமித்துக் கொண்டாடுகின்ற இச்சித்திரை புத்தாண்டு தினத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். மலர்ந்திருக்கின்ற இச் சித்திரை புத்தாண்டு தினத்தில் இன,மத பேதங்களைக் கடந்து புத்தாக்க சிந்தனையுடையவர்களாகவும் எதிர் காலத்தின் தேவைகளை உணர்ந்தவர்களாகவும் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

மலந்திருக்கின்ற இப் புத்தாண்டானது இலங்கை மக்களைப் பொறுத்த வரையில் முக்கியமான ஓர் புத்தாண்டாக நான் பார்க்கின்றேன். இந் நாட்டிற்கும் முக்கியமான ஓர் தருணமாக இது அமைந்திருக்கின்றது. ஏனென்றால் வடக்கில் நிலைகொண்டிருந்த பயங்கரவாதம் இப்போது முடிவுறும் தறுவாயை அண்மித்துக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில் மலர்கின்ற இப் புது வருடமானது உண்மையில் இந் நாட்டின் ஸ்த்திர தன்மைக்கும் பொருளாதார அபிவிருத்திற்கும் சமூக கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களுக்கும் சுதந்திரத்திற்கும் ஓர் வலுவான அடித்தளத்தை இடும் என்ற உறுதியான ஓர் நம்பிக்கை எனக்கிருக்கின்றது.இதே போன்ற வலுவான ஓர் நம்பிக்கையுடன் அனைவருமே இப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றார்கள்.

இந்த நேரத்தில் வடமாகாணம் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்த மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டிக்கின்ற வேளையிலே அங்குள்ள மக்களின் நலன்கள் தொடர்பாகவும் அவர்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பாகவும் அம் மக்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் நாங்கள் அதிகூடிய அக்கறை கொள்ள வேண்டிய நிலையினை இப்புத்தாண்டு வேண்டிநிற்கின்றது. ஏனென்றால் நடைபெற்ற யுத்தத்திலே துரதிஸ்டவசமாக பல நூற்றுக் கணக்கான அப்பாவிப் பொது மக்கள் கொல்லப் பட்டிருக்கின்றார்கள். பலர் அவர்களின் சொந்த இடங்களைவிட்டு இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கின்றார்கள். எனவே இன்னும் சிறிது நாட்களில் இவ்வாறாக கஸ்டப்படுகின்ற மக்கள் தங்களின் சொந்த இடங்களிலே தங்களின் ஜனநாயக வழுமியங்களைப் பேணிக்கொண்டு வாழ்வதற்கான சூழல் உருவாகுவதற்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக எமது கிழக்கு மாகாண மக்களும் கிழக்கு மாகாணசபையும் பூரண ஒத்துழைப்பு வழங்கும். அதே நேரம் இச்சந்தர்பபத்திலே இன மத மொழி பேதங்களை மறந்து ஐக்கிய இலங்கைத் திருநாட்டை உருவாக்குவதற்கு அனைவரும் இப்புத்தாண்டில் திடசங்கர்ப்பம் பூணுவோhம்.

போரின் கொடுமை ஓய்ந்து புதுப் பொலிவு பெற்று வருகின்ற இச் சந்தர்ப்hத்திலே பகை உனர்வுகளை மறந்தவர்களாகவும் ஒற்றுமை உணர்வு உள்ளவர்களாக வாழவேண்டும். காலங்கள் பல கடந்து சென்றாலும் கன்னியமிக்க எமது மூதாதையர்கள் பின்பற்றி வந்த இது போன்ற விடேசதினங்களில் நாம் அனைவரும் கடந்த காலத்தல் ஏற்பட்ட கசப்புணர்வுகளை மறந்தவர்களாக இத் தினத்தினை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும்;.

கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இன்று சுதந்திரமாக இச் சித்திரைப் புத்தாண்டினைக் கொண்டாடுகின்றார்கள். இதே போல் எதிர் காலத்தில் வடபகுதி மக்களும் இச் சித்திரைப் புத்தாண்டு தினத்தினை கொண்டாடுவார்கள் என நான் நம்புகினறேன். வடக்கிலும் இதே போன்ற நிலை தோன்றும் காலம் வெகுவிரைவில் வந்துவிடும் .

கிழக்கு முதல்வர்
சி. சந்திரகாந்தன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com