Thursday, April 23, 2009

இருதரப்பினரும் ஒத்துழைத்திருந்தால் இன்று இலங்கையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும். எரிக்சொல்ஹேம்.



இலங்கை நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நோர்வே நாட்டின் அமைச்சர் எரிக்சொல்ஹேம் அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் யுத்தத்தில் ஈடுபடுகின்ற இருதரப்பினரும் யுத்தத்தின் மூலம் தீர்வொன்றைக் காணமுடியும் என நம்பினர். ஆனால் இருதரப்பினரும் ஒத்துழைத்திருந்தால் இன்று இடம்பெற்றுள்ள இழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும்.

மேலும் புலிகள், தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறுகின்றனர், அவ்வாறாயின் யுத்த சூனியப் பிதேசத்தில் இருந்து வெளியேற விரும்பும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்வதை தவிர்த்து அவர்களது விருப்பிற்கேற்ப வெளியேற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 20 மில்லியன் நோர்வேஜியன் குரோண்களை இலங்கை அரசிற்கு ஒதுக்கியுள்ளாதாகவும் இருதரப்பினரும் சமாதான மேசைக்குச் சென்று அரசியல் தீர்வொன்றிற்கான வழியைத் திறந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment