புலிகளின் சிரேஸ்ட தளபதி ஒருவர் காயம்.
இன்று காலை யுத்தசூனியப் பிரதேசத்தில் உள்ள புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. வன்னிக்களமுனையில் உள்ள ஊடகவியலாளர் இன்று காலை யுத்த சூனியப்பிரதேசத்தின் எல்லப்புறங்களுடாக இரு வாகனங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரதும் புலிகளது மோட்டார் சைக்கிள் பிரிவினராலும் வழித்துணை வழங்கப்பட்டு மிக வேகமாகச் சென்றதை அவதானித்ததாக தெரிவிக்கின்றனர். அவர்களின் அத்தகவல்களின் படி புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் காயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக அவ்வாகனங்கள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment