இலங்கையில் மக்களுக்கு உயிர்வாழும் சுதந்திரம் இல்லை.- டக்ளஸ் தேவானந்தா.
இன்று அதிகாலை (ஞாயிறு) டண் ஒளி உறவுப் பாலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இலங்கையில் மக்களுக்கு உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் மேற்படி நிகழ்ச்சில் நேயரொருவரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர்: தான் வவுனியா இடைத்தங்கல் முகாம் பகுதியொன்றுக்கு சென்றிருந்தபோது, தான் வடக்கின் முதலமைச்சராக வந்தால் என்ன செய்வீர்கள் என ரஸ்ய ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தான் மேற்கண்டவாறு கூறியதாகவும், மேலும் அங்கு வாழும் மக்களது பேச்சு உரிமை , நடமாடும் உரிமை , தொழில் புரியும் உரிமை என்பன மறுக்கப்பட்டுள்ளதாகவும் தான் அமைச்சராக வந்தால் அவ்வுரிமைகளை ஒரே இரவில் மக்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்க தான் முயற்சி செய்வேன் என தெரிவித்ததாக கூறினார்.
அரசில் அங்கம் வகிக்கும் ஓர் அமைச்சர் தனது அரசின் ஆட்சியில் மக்களுக்கு மேற்கண்ட சுதந்திரங்கள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருப்பது பாரிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
0 comments :
Post a Comment