லண்டன் புலிகளின் பொறுப்பாளர் சாந்தன் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் புலிகளியக்தத்திற்கு ஆயுதங்கள் கொள்வனவுசெய்தல் , நிதிசேகரித்தல் மற்றும் அவ்வியக்கத்திற்கான பிரச்சார வேலைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றஞ்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவரான சாந்தன் என்றழைக்கப்படும் அருணாச்சலம் கிருஸ்சாந்தகுமார், 52, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கிங்ஸ்ரன் கிரவுன் நீதிமன்றத்தினால் இன்று (ஏப். 17) குற்றவாளியென நிருபிக்கப்பட்டள்ளார்.
மேற்படி மூன்று குற்றச்சாட்டுகளில் 2 குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டு ஒரு குற்றச்சாட்டு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் தொடருகின்ற தருணத்தில் நிருபிக்கப்பட்ட குற்றச்சாட்டகளுக்கான தண்டனை எதிர்வரும் வார நடுப்பகுதில் அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது.
கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்த சாந்தன் கடும் நிபந்தனைகளுடன் பலத்த பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இன்று அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment