Saturday, April 18, 2009

ஐ.நா வின் வேண்டுதலை இலங்கை அரச நிராகரித்துள்ளது. எந்த நேரத்திலும் நேரத்திலும் படையினர் யுத்த சூனியபிரதேசத்தினுள் நுழையலாம். -கோத்தபாய-



இலங்கையில் யுத்த சூனியபிரதேசத்திலும் இடைத்தங்கல் முகாம்களிலும் தங்கியுள்ள மக்களது நலன் தொடர்பாக அரசுடன் பேசுவதற்காக இலங்கை வந்துள்ள ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரத அதிகாரி நம்பியார் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் வியாளக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய மற்றும் நேற்றுக்காலை ஜனாதிபதி மஹிந்தா ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 48 மணித்தியாலங்களுக்கு வழங்கப்பட்ட யுத்த நிறுத்தத்தை வன்னியில் யுத்தசூனியப் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்கள் வெளியேறுவதற்கு போதுமான கால அவகாசம் கொடுக்கும் முகமாக நீடிக்குமாறு மேற்படி சந்திப்புக்களின்போது வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது. அவ் வேண்டுதலை முற்றாக நிராகரித்துள்ள அரசு தமது தரப்பு நியாயங்களை அவர்களுக்கு முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக லண்டன் பிபிசி செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பமைச்சின் செயலர், யுத்த நிறுத்தத்தை நீடிக்க முடியாமைக்கான காரணங்களாக கடந்த 48 மணிநேர மோதல் தவிர்ப்பு அறிவிப்பை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் மாறாக அச்சந்தர்பங்களில் சர்வதேச மற்றும் உள்ளுர் அழுத்தங்களுக்கு கீழ்படிய மறுக்கும் புலிகள் மக்கள் அங்கிருந்து வெளியேறுவதை தடுத்துவந்தனர். எனவே புலிகள் மக்களை வெளியேற அனுமதிக்காத வரைக்கும் யுத்த நிறுத்தம் என்பது அவசியமான ஒன்றல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சந்தர்பத்தில் நாம் யுத்த நிறுத்தம் ஒன்றை செய்யும் போது புலிகள் தம்மை மீழ் அமைத்துக்கொள்ள கூடியதான ஓர் நிலைமை ஏற்படும். அதற்கு நாம் இடம் கொடுக்கப்போவதில்லை. எது எவ்வாறாயினும் எமது யுத்தம் மக்கள் பாதிப்படையாதவாறு முன்னெடுக்கப்படும் என்பைதை உறுதியுடன் கூறுகின்றேன். படையினர் சரியான தருணம் பார்த்து வன்னியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் இறங்குவர். அது எந்த நேரத்திலும் இடம்பெறலாம். அதை களத்தில் உள்ள தளபதிகளே முடிவெடுப்பர். பிரபாகரன் யுத்தசூனியப் பிரதேசத்தில் இருந்தால் அவர் கைது செய்யப்படுவார் எனவும் பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது ஊழியர்கள் இதுவரை அங்கிருந்து வெளியேற அரசு அனுமதி வழங்காததையிட்டு அதிருப்பி தெரிவித்துள்ள ஐ.நா சபை இடம்பெற்று வரும் யுத்தத்தில் கட்ந்த இரு மாதங்களில் மாத்திரம் 2800 பேர் அளவில் கொல்லப்பட்டும் 7000 பேர் அளவில் காயமடைந்தும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment