Friday, April 10, 2009

ஸ்ரீ ரங்கா தேர்தலில் குதிக்கின்றார்.

சக்தி தொலைக்காட்சியின் மின்னல் எனும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் அறிமுகமாகிய ஸ்ரீ ரங்கா எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக கொழும்பு அல்லது மலையக மாவட்டங்களில் ஒன்றில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஜனநாயக வழிமுறைக்குத் திரும்பியிருந்த சகல தமிழ் அமைக்களையும் புலிகளின் தீவிர ஆதரவாளராக நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சித்து வந்த மேற்படி ஸ்ரீ ரங்கா அவர் விமர்சித்த அதே பாதையில் பயணிப்பாரா என பலரும் அதிசயப்படுகின்றனர். எது எவ்வாறாயினும் சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பினராலும் இவ்விடயம் உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

No comments:

Post a Comment