Thursday, April 9, 2009

யுத்த சூனியப்பிரதேசத்தை சுற்றிவளைத்துள்ள படையினர் மக்களை வெளியேறக் கோருகின்றனர். தமிழ் சினிமா பாடல்களும் ஒலிபரப்பப்படுகின்றன.



புதுக்குடியிருப்பில் புலிகளிடம் எஞ்சியிருந்த சிறு பிரதேசத்தையும் படையினர் தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததை அடுத்து புலிகள் பொது மக்கள் தங்கியுள்ள யுத்த சூனியப்பிரதேசத்தினுள் நுழைந்துள்ளனர். அரசினால் மக்களுக்கா யுத்த சூனியப்பிரதேசமாக பிரகடணப்படுத்தப்பட்ட இப்பிரதேசம் அரச மற்றும் தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் இயங்கி வருகின்றது.

புலிகள் முழுத்தோல்வியைத் தழுவி மக்கள் தங்கியுள்ள யுத்த சூனியப் பிரதேசத்தினுள் நுழைந்ததையடுத்து படையினர் அப் பிரசேத்தை சுற்றி வளைத்துள்ளனர். புதுமாத்தளன் பிரதேசத்தை பிரிக்கின்ற களப்புக்கு இப்பால் நிலைகொண்டுள்ள படையினர் சில பகுதிகளைத் தெரிவு அங்கு ஒலிபரப்பிகளை மரங்களின் உச்சியில் கட்டி சினிமாக பாடல்களை ஒலிபரப்புகின்றனர்.

களப்புக்கு இப்பால் நிலைகொண்டுள்ள படையினர் களப்பின் ஆளம் குறைந்த பகுதிகளைத் தெரிவுசெய்து அங்கு ஒலிபரப்பிகளைக் கட்டி அப்பகுதிகளுடாக மக்களை படையினரின் கட்டுப்பாட்டு பகுதிகளினுள் வருமாறு அழைப்பு விடுகின்றனர். ஓலிபரப்பி கட்டப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்களை உள்வாங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்பதுடன் அப்பிரதேசங்கள் களப்பில் ஆளம் குறைந்த பிரசேங்கள் எனவும் படையினர் ஒலிபெருக்கியூடாக அறிவிக்கின்றனர்.

ஓலிபரப்பியின் சத்தம் அங்குள்ள மக்கள் சகலரினதும் காதுகளில் கேட்கும் என்பதில் சந்தேகம் இல்லை. யுத்தி சூனியப் பிரதேசத்தில் மக்கள் நடமாட்டம் படையினரின் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ளது.




No comments:

Post a Comment