Friday, April 3, 2009

புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவு பொறுப்பாளர்கள் அமிதாப், கோபித் பலி

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் படையினருக் கும் புலிகளுக்குமிடையே நடைபெற்ற கடும் மோதலில் புலிகளின் “சார்ள்ஸ் அன்டனி” படைப்பிரிவின் பொறுப் பாளர் ‘அமிதாப்’ மற்றும் முன்னாள் பொறுப்பாளரும் தற் போதைய உதவி பொறுப்பாளருமான ‘கோபித்’ ஆகி யோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதியும் முதலாம் திகதியும் இரு தரப்புக்குமிடையே நடைபெற்ற மோதலிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை களத்திலுள்ள படைப்பிரிவினர் ஊர்ஜிதம் செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

சார்ள்ஸ் அன்டனியின் பெயரில் இயங்கும் சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவினர் களத்தில் படையினருடன் கடும் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களில் படையினரின் தாக்குதல் கார ணமாக பொருந்தொகையான புலிகள் கொல்லப்பட்ட னர்.

இச்சந்தர்ப்பத்திலேயே புலிகளின் தலைவர் பிரபாக ரனின் மகனான சார்ள்ஸ் அன்டனியும் படுகாயமடைந் துள்ளதாக படையினர் தெரிவிக்கின்றனர்.

சார்ள்ஸ் அன்டனி படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த கோபித் சில மாதங்களுக்கு முன்னரே பொறு ப்பிலிருந்து நீக்கப்பட்டு அமிதாப் தலைமைப் பொறு ப்பை ஏற்றுக் கொண்டிருந்தார் என்றும் படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் பதுங்கியிருந்த புலிகள் மீது படையினர் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளுக்குப் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள் ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவு நேற்று மேற் கொண்ட இந்த திடீர்த் தாக்குதல் புலிகள் பதுங்கியிருந்த இடத்துக்கு மிகவும் அண்மையிலிருந்து மேற்கொள்ளப் பட்டதாலேயே புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலின் பின்னர் அப்பிரதேசத்தில் படையினர் நடத்திய தேடுதலின்போது புலிகளின் 31 சடலங்களையும், ரி – 56 ரக துப்பாக்கிகள் 50, 2 ஆர்.பி.ஜி.க்கள், 2 பல நோக்கு இயந்திரத் துப்பாக்கிகள், ஒரு எம் –16 ரக றைபிள், 2 தொலைத்தொடர்பு சாதனங்கள், ஒரு ஜீ.பி. எஸ். கருவி, வரைபடங்கள், ஒரு ஆமர்பிளேட் ரக் வண்டி, ஒரு அதிவேகப்படகு ஆகியவற்றையும் கைப்பற்றியுள் ளனர்.

இதேவேளை, கடந்த முதலாம் திகதி இராணுவத்தின் 53 ஆம் மற்றும் 55 ஆம் படைப் பிரிவினர் புதுக் குடி யிருப்புக்குக் கிழக்காக பதுங்கியிருந்த புலிகளின் பதுங்கு குழிகள் மற்றும் அரண்கள் என்பனவற்றைக் கைப்பற்றி அப்பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்தி வந்தனர் என் றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Thanks Thinakaran

No comments:

Post a Comment