Tuesday, March 31, 2009

யுத்தமும் பொருளாதரமும். -கிழக்கான் ஆதம்-

“உலகத்தின் பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும் மார்க்ஸீய ஆராய்ச்சியை சரியென்றே கூறுகின்றன. மற்ற முறைகள் இருட்டில் தடவிக்கொண்டிருக்கும்போது மார்க்ஸீயமே இந்த பிரச்னையை தெளிவாக விளக்கியதோடல்லாமல், அதற்கு ஒரு தீர்வையும் அளித்திருக்கிறது.

என்னுள் இந்த எண்ணம் வலுப்பெற வலுப்பெற நான் புத்துணர்வு கொண்டவனானேன். ஒத்துழையாமை இயக்கத்தின் தோல்வி எனக்களித்த சோகம் குறைந்தது. உலகம் நடக்கவேண்டிய விஷயத்தை நோக்கி வேகமாக பயணிக்கிறது, இல்லையா ? பெரும் போர்களும் அழிவுகளும் நம்முன் பெரும் ஆபத்துகளாய் நிற்கின்றன. இருந்தாலும் நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். நின்று போய்விடவில்லை. நமது தேசத்தின் போராட்டம் பெரும் பயணத்தின் ஒரு பகுதி. இன்றைய அடக்குமுறையும், சோகமும் நமது மக்களை எதிர்கால பெரும் பணிகளுக்கு உகந்தவர்களாக உருவாக்கும். உலகத்தை உலுக்கும் பெரும் கருத்துக்களை கவனிக்கச்சொல்லி நம் மக்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள். நாம் இன்னும் வலிமையுடையவர்களாக இருப்போம். இன்னும் கட்டுப்பாடு நிறைந்தவர்களாக இருப்போம். நம்முள் இருக்கும் வலிமையற்ற கூறுகளை அழிப்பதன் மூலம் நாம் இன்னும் கடினப்படுவோம். எதிர்காலம் நமது”.

-விடுதலையை நோக்கி: ஜவஹர்லால் நேருவின் சுயசரிதை ( நியுயார்க், ஜான் டே கம்பெனி வெளியீடு, 1941)-

இதை எழுதும்போதே நான் என்னைச் சார்ந்த சகோதரர்களாலும் எதிர்தரப்பு நண்பர்களாலும் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாவேன் என்பது எனக்கு தெரியும். என்றாலும் இப்படிப்பட்ட சந்தர்பங்களில் இத்தகைய எழுத்துக்களானது சரியானது என உலகில் பல எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்களில் ஒரு சாரார் வாதிடுவதால் நானும் ஒரு சார்புவாத உண்மையை சொல்ல முற்படுகினறேன். நான் ஒரு இலங்கையன்.

இன்று நம்முடன் வாழும் இலங்கையர்களில் ஒரு சாரார் தற்போதைய அரசின் போக்கை கண்டிப்பவர்களாகவும் மற்றயவர்கள் மௌனிகளாகவும் இருக்கின்றனர். நாங்களோ அரசை அவர்களின் தற்போதைய கண்டிப்பான போக்கை விமர்சிப்பர்களாக இருந்தாலும் நாட்டின் நலன் கருதி அதன் நன்மை தீமைகளை உற்று நோக்க வேண்டும் நாம் எந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும் எவர் பிரதமரானாலும் அவர்களிடம் காணப்படும் குறைகளை சுட்டிக் காட்டுவதற்கும் விமர்சிப்பதற்கும் இருக்கும் உரிமையைப் போலவே அந் நாடு மிகவும் நெருக்கடியான கால கட்டத்தை எதிர்நோக்கி ஒரு மக்கள் மீட்சியை மேற்கொள்ளும் போது அதை ஆதரிக்கின்ற கடமையும் இருக்கின்றது. இதற்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் விதிவிலக்கானவர்கள் காரணம் அவர்கள் விடுதலைப் புலிகளின் தவறுகளை எப்போதுமே கண்டித்தது கிடையாது அதற்கு விசில் அடித்து ஆசி வழங்குவர்கள் மட்டுமே. தவிரவும் அவர்கள் எவர் நல்லதை மக்களுக்கு செய்தாலும் அதை ஏற்றுக் கொள்பவர்கள் அல்ல அவர்களுக்கு வேண்டியதெல்லாம் நரமாமிசம் மற்றும் இரத்தம். இவ்வாறு அவர்கள் எதிர்மறையாக செயற்பட்டாலும் நாம் அவர்களையும் இலங்கை பிரஜைகளாகவே பார்க்கிறோம். அதுவே அரசின் நிலைபாடாகவும் தெரிகிறது எனவேதான் அவர்களுடன் பேச புலம்பெயர் சமூகத்தை (புலிகளின் முகவர்கள் உற்பட) ஜனாதிபதி அழைத்திருக்கிறார்.

விடயத்திற்கு வருவோம்..இன்று இலங்கை நோக்கும் பாரிய யுத்தம், உலக பொருளாதார வீழ்ச்சி மற்றும் இலங்கையின் வெளிநாட்டு நாணயமாற்று கையிருப்பின் பெறுமதி வீழ்ச்சி இலங்கையில் சில வங்கிகளின் திவால் என ஒரு பன்முக சிக்கல்களுக்கு இலங்கையும் அதன் அரசும் முகம் கொடுக்கிறது. இதைச் நான் எழுதும்போது ஆம் புலிகளின் அரசியல் பொருப்பாளர் சொன்னது போலவும் புலம்பெயர் தேசங்களில் புலிகளின் ஆதரவாளர்கள் நடத்துகின்ற புறக்கணிப்பு மாயையாலும் (அவர்கள் பிடிக்கும் புலிக்கொடியும்(புடவை) அணித்திருக்கும் உடைகளும் தின்னும் உணவும் இந்திய,சீன,இலங்கை தாயாரிப்புக்கள் என்பதை யாரும் உஷ்..கேட்டுவிடாதீர்கள்) இது நிகழவில்லை. உலக பொருளாதார வீழ்ச்சி அவதானிக்கப்பட்ட பின்பே அந்த அரசியல் பொறுப்பாளர் அப்படி ஒரு புருடா விட்டார் என்பதே உண்மை. அத்தகைய பிரச்சினைகள் யுத்தம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் இலங்கையை பாதிக்கவே செய்திருக்கும் ஆனால் தற்போதைய நிலையைவிட குறைவாக இருந்திருக்கும் அவ்வளவுதான்.

புலிகளின் முன் 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் யுத்தமா (மகிந்த)? சமாதானமா(ரனில்)? என்று முடிவெடுக்கும் உரிமை கையளிக்கப்பட்டபோது அவர்கள் யாழ்பான மக்களை வாக்களிக்காமல் புறக்கணிக்கச் சொல்லி ஐரோப்பாவில் தடையையும் இலங்கையில் யுத்தத்தையும் தேர்ந்தேடுத்தர். எனவே அதிலிருந்து மீள்வதற்கும் புலிகளின் சர்வதிகாரத்தில் இருந்து மீள்வதற்கும் இலங்கை பிரஜைகள் ஒவ்வொறுவரினதும் பங்களிப்பு அந் நாட்டுக்கு முக்கியமானது. அரசு என்பது அந் நாட்டின் மக்களே என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

இலங்கை அரசு தற்போது நடத்திவரும் யுத்தம்தான் இவ்வளவு பொருளாதார மற்றும் இதர தேவைகளுக்கு காரணம் என கொள்வோமானால் அது முட்டாள் தனமானதாகும். சமாதானத்தை அரசு புலிகளின் அடாவடித் தனங்களை பொறுத்துக்கொண்டு பேணிக்காத்து இச் சிக்கல்களை மக்கள் எதிர் கொண்டே இருக்க வேண்டும். எப்படியென்று நோக்குவோமானால் புலிகள் சமாதான காலமாக இருந்தாலும் தங்களின் சகோதர படுகொலைகள் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் தங்களின் சுகபோக வாழ்கைக்கான வரி,கப்ப அறவீடுகள் மற்றும் இதர விடயங்களை ஒரு நிமிட இடைவெளிவிடாமல் நடத்திக் கொண்டிருப்பதொடு சமாதானப் பேச்சுவார்தை என்ற பெயரில் உலகம் சுற்றி சொப்பிங் செய்துகொண்டுதான் இருப்பார்கள் (நான் சொல்லவில்லை தேசத்தின் குரல்.அன்டன் பாலகிங்கம் அலஸ்சாந்திரா பிளேஸ் மாவீர் விளக்க உரையிலிருந்து) ஆக அவற்றுக்கெல்லாம் அரசு பொருளாதார நெருக்கடியுடன் முகம் கொடுக்கவே நேர்ந்திருக்கும்.

மட்டுமல்லாது இலங்கை மக்களின் அதிகளவான அபிவிருத்திக்கான பணம் புலிகளிடம் அவர்களின் நலனுக்காகவும் சுகபோக வாழ்கைக்காகவும் முடக்கப் பட்டிருக்கும் அது இலங்கை பொருளாதாரத்தையும் இலங்கையின் தேசிய வருமானத்தையும் பாதிக்கவே செய்யும். கடந்த இருப்பதைந்து வருடங்களாக பாதித்தே இருந்தது இதுவும் இலங்கையின் பொருளாதார வீச்சிக்கும் நாட்டு மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் காரணமாகவிருந்தது. இலங்கையரின் அதிகளவான பணம் கருப்புப் பணம் போன்று புலிகளிடம் தேங்குவதால் அது இலங்கைப் பொருளாதாரத்தை மிகவும் பாதித்தது. பல அரச நிறுவங்கள் பல தசாப்தங்களாக நட்டத்திலேயே இயங்கி வந்தன அவைகளை இந்த பிரச்சினையின் காரணமாக ஆட்சி செய்த அரசுகளால் எங்கு பிழையென்று தெரிந்து மீட்க முடியாமல் போனது இலங்கையர் தலைகளில் கடன் சுமை அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

இவற்றைக் கையாள்வதில் அந்தந்த அரசுகள் பல சிக்கலான பொருளாதார மற்றும் பௌதிகப் பிரச்சினைகளை எதிர்நோக்கின. அவைகள் இலங்கையரின் அடிப்படை கட்டுமானங்களின் வீழ்சியை ஏற்படுத்தியது. எப்படி என்று நோக்குவோமானால் புலிகள் தங்களால் வசூலிக்கின்ற நிதியின் மூலம் பொதுச் சொத்துக்களுக்கு அழிவை ஏற்படுத்தினர் (மின் மாற்றி தகர்பில் தொடங்கி மத்திய வங்கி குண்டுத் தாக்குதல் வரை உதாரணம்) மட்டுமின்றி சகோதர படுகொலைகள், இனச் சுத்திகரிப்புக்கள் என அவர்கள் தங்களின் பாஸிசத்தை முன்னெடுக்கும் போது அவற்றுக்காக அரசு நஸ்ட ஈட்டில் தொடங்கி வைத்திய வசதி, பொலிஸ் விசாரணை போக்குவரத்து என தாங்கள் வரவு செலவு திட்டத்தில் நிர்ணயிதத்தைவிட அதிகமான செலவுகளை இவைகளுக்காக செலவழிக்க நேரிட்டது பாதுகாப்பு செலவீனம் உற்பட. இப்போது சிந்திப்பீர்களானால் புலிகளிடம் சேரும் இந்தப் பணங்கள்தான் நீண்ட காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தை அகல பாதாளத்தில் தள்ளிவிட்டது என்பது புரியும்.

ஆக இவ்வாறான சூழலில் இதிலிருந்து மீள்வது மிகவும் முக்கிய கடப்பாடாக மக்களுக்கும் மற்றும் அரசுக்கும் உள்ளது அவ்வாறான ஒரு நிலையில் இருந்து மீள்வதற்கு ஒரு சிறிய காலத்துக்கு நாம் கொஞ்சம் கஸ்டங்களை தாங்கிக் கொள்வது நமது இலங்கையை நீண்ட கால நோக்கில் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வழி செய்யும். மட்டுமல்லாது நமது நாட்டின் சுவிட்சத்திற்கும் மக்களின் நல்வாழ்விற்கும் அது துணைபுரியும்.

இதை நான் எழுதும்போது என்னடா இவன் மகிந்த அரசுக்கு கொடி பிடிக்கிறான் என நினைக்கலாம் இவ்வாறான செயல்முறைகளை இன்றும் உலகில் பல நாடுகள் கையான்டு வெற்றி கண்டிருக்கின்றன அன்றியும் கையாள்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உற்பட உலகின் ஒவ்வொறு மூலையிலும் இவ்வாறான முறை வேவ்வேறு பெயர்களிள் வேவ்வேறு காரணங்களுக்காக கடைப்படிக்கப் பட்டிருந்தன மற்றும் படுகின்றன..

ரஷ்யாவில் (ஊடகங்கள் உட்பட) சுதந்திர செயற்பாடு தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி புஷ் தெரிவித்த கருத்துக்கு ரஷ்ய பிளாடுமின் பூட்டின் “ரஷ்யா எவ்வாறான ஜனநாயகத்தை ரஷயாவுக்குள் கடைபிடிக்க வேண்டும் என அதற்கு தெரியும் அமெரிக்க ஜனாதிபதி மற்றநாடுகளின் இறைமைகளில் தலையிட வேண்டாம்” எனக் கூறியிருந்தார்.

இதுபோலவே விடுதலைப் புலிகளும் அவர்களின் மக்களை சுதந்திரமாக இயங்க என்றும் அனுமதித்ததில்லை அவர்களின் மக்கள் மீதான கட்டுப்பாடுகள் வரி விதிப்புக்கள் கப்பம் பாஸ் நடைமுறை என்பவற்றுக்கு அவர்களின் சார்பு வாதமும் இவ்வாறே அமைந்தது
மத்திய கிழக்கு நாடுகள் உலகில் செல்வப் செழிப்பில் மிக உயர்ந்த நிலையில் இருந்தாலும் அந் நாடுகளில் சுதந்திரமான செயற்பாடுகள் முழுமையாக அனுமதிக்கப் படுவதில்லை என முழு உலக்தாரும் குரல் கொடுக்கின்றனர்.

இவ்வாறு எந்தப் பிரச்சினையும் அற்ற சகல வசதிகளும் உள்ள நாடுகளே சில கட்டுப்பாடுகள் தனது நாட்டின் நன்மைக்காகவும் தனித் தன்மையை பாதுகாப்பதற்காகவும் பிரயோகிக்கும்போது இலங்கை போன்ற ஒரு நீண்ட கால உள்நாட்டு பிரச்சினைக்கு உட்பட்ட நாடு அதற்கான தீர்வுக்காக சில இறுக்கமான நடைமுறைகளை வைத்திருப்பதை குறைகூற யாருக்கும் தகுதியில்லை எனலாம். மட்டுமல்லாது புலிகளின் தரகர்களுக்கும் அவர்களின் பத்திரிகை மற்றும் வானொலி தொலைக்காட்சிகளுக்கும் எவ்வித தகுதியும் இல்லை. காரணம் அவர்கள் இதுவரை பொதுமக்கள் மீது புலிகள் நடத்தும் தற்கொலை தாக்குதல்களை கூட கண்டிக்க திரானியற்றவர்களாக இருந்தார்கள் என்பதே உண்மை.

ஆகவே இப்படியாகப் பட்ட இக்கட்டான கால கட்டத்தில் இலங்கை ஒரு சர்வதிகார பாஷிஸ அமைப்புக்கு எதிராக யுத்தம் புரிந்து அவர்களை அழித்துவிடுவதின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் போது இலங்கை பிரஜைகளாக நாங்களும் எங்கள் மீதான சுமைகளை தாங்கிக் கொண்டு நமது அரசாங்கத்திற்கும் வெற்றியை ஈட்டும் நமது இராணுவத்தினருக்கும் ஒத்தாசையாக இருக்க வேண்டும். அப்போதுதான் புலிகளின் விழ்ச்சியின் பின்னால் அரசியல் தீர்வு நமது தேசத்தை மீளப் கட்டியெழுப்புவதற்கான பொது கட்டுப்பானப் பணிகளில் நாங்கள் சுதந்திரமாக செயற்பட்டு மட்டுமல்லா எதிர்ப்பு மற்றும் ஆதரவுக் கருத்துக்களை தேவையான இடங்களில் தெரிவித்து ஒரு முழு சுதந்திரமான மக்களாக நமது மக்களை மாற்ற முடியும். அவ்வாறானதோரு வரலாற்று முக்கியத்துவமாக கால கட்டத்தில் நாம் நிற்கிறோம்.

இன்று நாம் இழைக்கின்ற தவறுகள் வரலாற்றுத் தவறாக நம் சந்ததிகளால் படிக்கப் படும். தமிழர் சிங்களவர் இஸ்லாமியர் கிரிஸ்தவர் மலாயர் பரங்கியர் என்று தனிச் சமூகம்களாக நாம் இருந்தாலும் நாம் அனைவரும் இலங்கையரே நமது தாய் நாடு இலங்கை என்பதை மறக்கலாகாது.

No comments:

Post a Comment