Wednesday, April 8, 2009

டென்மார்க்கில் 83 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

வன்னியில் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி யுத்த நிறுத்தம் ஒன்றை பிரகடணப்படுத்துமாறு இலங்கை அரசிற்கு டென்மார் அரசாங்கம் ஆழுத்தம் கொடுக்க வேண்டுமென டென்மார்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 83 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று பிற்பகல் புலிகளின் அனுதாபிகளான 150 தமிழ் மக்கள் டென்மார்கில் உள்ள அமைச்சகம் ஒன்றின் முன்பாக ஒன்று கூடினர். இவ் ஒன்று கூடலுக்கு பிற்பகல் 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நேரம் 5 மணியை தாண்டியதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் ஆர்பாட்டகாரர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியபோது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வாக்குமூலங்களை பதிவுசெய்த பொலிஸார் நள்ளிரவு விடுதலைசெய்துள்ளதாக The Copenhagen Post எனும் பத்திரிகை தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment