புலிகளின் தமிழீழப் பரிசு. தனது 5 வயது மகனின் இறந்த உடலை கறுப்பு பையில் கொண்டு செல்லும் தந்தை.
புலிகள் இன்று தமிழ் மக்களுக்கு இருதயம் பிழக்கும் வரலாற்றுக் கதைகளையே மிகுதியாக வைத்துள்ளனர் என்பதை மேலே உள்ள படத்திற்கான கதை சொல்கின்றது.
இன்று நண்பகல் புதுமாத்தளன் பகுதியில் உள்ள மக்கள் வெள்ளம் விடுவிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி நகர்கின்றது. அங்கே மேலே படத்தில் உள்ள 5 வயதுக்குழந்தையின் தந்தையும் தனது குழந்தையை சுமந்த வண்ணம் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி நெருசல்களுடாக நகர்ந்து கொண்டிருகின்றார்.
மக்களின் வெளியேற்றத்தை தடுக்க வந்த புலிகள் மக்கள் மீது பாரபட்சமின்றி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்கின்றனர். புலிகளின் துப்பாக்கி ரவை ஒன்று தகப்பனின் கையில் இருந்த குழந்தையின் கழுத்துப்பகுதியை ஊடறுத்துச் செல்கின்றது. குழந்தையின் உயிர் பிரிந்துவிடும் என்பதை நம்ப மறுத்த தகப்பன் தனது செல்லக் குழந்தையை கட்டியணைத்தபடி அரச கட்டுப்பாட்டுப் பிரதேச்தை நோக்கி ஓடுகின்றார்.
அரச கட்டுப்பாட்டு பகுதியில் காத்துநின்ற இராணுவ வைத்தியர்கள் குழந்தையை பாரமெடுக்கின்றபோது குழந்தையின் உயிர் பிரிந்து சில நிமிடங்கள் ஆகியுள்ளது. தந்தைக்கு ஒர் கறுப்பு பொலித்தீன் பை கொடுக்கப்படுகின்றது. தனது குழந்தையின் சடலத்தை அந்த பையினுள் போட்டு மடியில் வைத்துக்கொண்டு இடைத்தங்கல் முகாம் ஒன்றை நோக்கிச் செல்லும் தந்தையின் சோகமே ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இன்று புலிகளால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பிரபாகரனது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மனிதகேடயங்களாக பயன்படுத்தப்பட்ட மக்கள் புலிகளால் அனுபவித்துள்ள துயரங்களுக்கான ஆதாரங்களில் இதுவும் ஒன்று.
0 comments :
Post a Comment