5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியெத்திய மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கோட்டத்திற்கு உட்பட்ட 5ம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் கௌரவித்து ஊக்கப்படுத்தப்பட்டனர். ஆலையடி வேம்பு கிராம அபிவிருத்தி சங்கத்தினராலும் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பு செயலகத்தினாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் அப்பிரதேசத்தில் சித்தியடைந்த 23 மாணவர்கள் கௌரவித்து ஊக்கப்படுத்தப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் அம்மாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி, மாகாணசபை உறுப்பினர் செல்வராசா, மகாசக்தி நிறுவனத்தின் மாணிக்கவாசம் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு அம்மாணவர்களுக்கான பதக்கங்கள் வழங்கி கௌரவித்தனர்.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றி திரு. இனியபாரதி, கடந்த கால யுத்தம் காரணமாக எமது சமுதாயதாய கல்வி வழர்சியல் ஏற்பட்ட தாமதம் இன்று ஓர் வழர்நிலையை கண்டுள்ளதை தான் உணர்வதாகவும், எமது எதிர்கால சமுதாயத்தின் தூண்களாக விளங்கக்கூடிய எமது மாணவர்களுக்கு ஆசிரியர்களும் சமுதாய பெரியார்களும் தம்மால் இயன்ற ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
0 comments :
Post a Comment