இன்று காலையில் இருந்து 35000 மக்கள் அரச கட்டுப்பாட்டினுள் வந்துள்ளனர். - ஜனாதிபதி-
புலிகளின் வன்பிடியிலிருந்து இன்று காலை வரலாற்றில் இல்லாத அளவு மக்கள் வெளியேறியுள்ளனர். இன்று அதிகாலை தொடக்கம் நண்பகல் வரை 35000 மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளை அடைந்துள்ளதாக நாட்டின் ஜனாதிபதி AFP செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
புலிகள் முற்றாக தோல்வியை தளுவியுள்ள நிலையில் அவர்களது இறுதி தோல்வி இன்று மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதுடன் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தனை காலமும் புலிகளால் அம்மக்கள் அனுபவித்த துயரங்களுக்கு படையினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment