Monday, April 6, 2009

பொட்டுவின் ரொஸி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 25 பேர் உட்பட 107 புலிகள் கடந்த 6 நாட்களில் படையினரிடம் வன்னியில் சரண்.

பொட்டு அம்மான் மற்றும் அவரது துணைத்தளபதி கபில் அம்மானின் கீழ் இயங்கும் ரொஸி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 25 பேர் உட்பட 107 புலிகள் மக்களோடு மக்களாக வந்து படையினரிடம் தஞ்சம் கோரியுள்ளனர். இவர்களின் 10 பேர் அளவில் புலிகளினால் வழங்கப்படும் லெப். கேணல் தரத்தில் உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்களில் கபில் அம்மானுக்கு அடுத்த நிலையில் இருந்த ஒருவரும் அடங்குவதாகவும், அவர் பல விடயங்களை படையினருக்கு தெரிவித்துள்ளதாகவும் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது தகவல்களின் படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் பொட்டு அம்மான் மற்றும் கபில் அம்மான் உட்பட பல தளபதிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு இரணைப்பளை மற்றும் யுத்த பாதுகாப்பு வலயத்தில் வைத்து சிகிச்கை அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் புலிகளின் தலைவர் பிரபாகரனது பாதுகாப்பு பிரிவிற்கும் ராதா படையணிக்கும் பொறுப்பாகவிருந்த ரட்ணம் மாஸ்ரர் பிறிதொரு விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளமையை அவர்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். வன்னி யுத்தம் தொடங்கியதில் இருந்து புலனாய்வுத்துறைப் பொறுப்பாளார் பொட்டுவின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவும் தோல்வியடைந்துள்ளமை போராளிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளதாக மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com