Wednesday, April 22, 2009

மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள படையினருக்கும் புலிகளுக்கும் மோதல். 22 புலிகளின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்கிழமை புதுமாத்தளன் பகுதியில் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த படையினருக்கும் புலிகளுக்கும் ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளது. தமது கடைசி இருப்பிடமான புதுமாத்தளன் கரையோரப்பிரதேசத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக புலிகள் கடும் பிரயத்தனம் செய்து வருவதாக தெரியவருகின்றது.

மேற்கண்ட மோதல்களின் பின்னர் அப்பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட படையினர் 22 புலிகளின் சடலங்களையும் 9 ரி56 ரக துப்பாக்கிகளையும் கண்டெடுத்துள்ளதாக பாதுகாப்பமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் புதுக்குடியிருப்புக்கு கிழக்கே 53ம் படையணியினருக்கும் புலிகளுக்கும் பலத்த மோதல் ஒன்று இடம்பெற்றதாகவும் அம்மோதலில் 14 புலிகள் கொல்லப்பட்டும் 21 புலிகள் காயமடைந்தும் உள்ளமை புலிகளின் தொடர்பாடலை ஒட்டுக்கேட்டபோது தெரியவந்துள்ளதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com