புலிகளின் முன்னணி தளபதிகளான தீபன், நாகேஸ், விதுஷா ஆகியோர் பலி. 176 உடலங்கள் மீட்பு (இரண்டாம் இணைப்பு)
கடந்த சில தினங்களாக புதுக்குடியிருப்பு கிழக்கே அம்பலவாணன்பொக்கணை மற்றும் அதை அண்டிய பிரதேசங்களினூடாக ஊடுருவித் தாக்குதல் நடாத்த நுழைந்த புலிகளின் நான்கிற்கும் மேற்பட்ட படையணிகள் படையணியினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தன. 1.5 சதுர கிலோமீற்றர் நிலப்பரபினுள் 1000 மேற்பட்ட புலிகளை முடக்கிய 58ம் 53ம் படையணியினர் நேற்று இரவு முதல் இன்று காலை வரை நாடாத்திய அதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான புலிகளை கொன்றழித்துள்ளனர்.
வன்னித் தகவல்களின்படி இதுவரை புலிகளின் 176 உடலங்கள் கைப்ற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் பல உடலங்கள் கைப்பற்றப்படும் எனவும் தெரியவருகின்றது. கைப்பற்றப்ட்ட உடல்களில் வட பிராந்திய கட்டளைத் தளபதி தீபன், கேணல் விதுஷா, கேணல் தூக்கா, புலிகளின் முன்னாள் மட்டு மாவட்ட தளபதி கேணல் நாகேஷ், புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்காவல் பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த கடாபி, முன்னணித் தளபதிகளான ரூபன், நகுலேஸ்வரன் ஆகியோரது உடலங்கள் இனம் காணப்பட்டுள்ளது.
முற்றுகைக்குள்ளாகியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலிகளை மீட்பதற்காக புலிகளின் மேலும் பல படையணிகள் பொட்டு தலைமையில் களமிறங்கியிருந்தன. படையிரின் உசார்நிலை காரணமாக முற்றுகைப் பிதேசத்தை நெருங்க முடியாத பொட்டு அங்கு சிக்கியிருந்த முன்னணித் தளபதிகளை வெளியேற உத்தரவிட்டிருந்தார். பொட்டுவின் உத்தரவுக்கமைய அவர் குறிப்பிட்ட பகுதியால் வெளியேற முனைந்த அனைத்து தளபதிகளும் படையினரின் பொறியில் சிக்கியதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment