Saturday, April 25, 2009

ஐ.நா ஊழியரின் 16 வயதுடைய மகளை புலிகள் பலாத்காரமாக யுத்தத்தில் ஈடுபடுத்துகின்றனர். 12 வயது சிறுவர்களும் யுத்தத்தில்.



யுத்த சூனியப் பிரதேசத்தின் ஒரு மூலையினுள் முடக்கப்பட்டுள்ள புலிகள் யுத்தத்தில் 12 வயது சிறுவர்களைக்கூட பலாத்காரமாக ஈடுபடுத்துகின்றனர் என ஐ.நா இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கைக்கான ஐ.நா பேச்சாளர் கோல்டன் வைஸ் இன்று பேசுகையில், யுத்த சூனியப் பிரதேசத்தில் மிகவும் கஷ்டங்களுடன் வாழ்ந்து வந்த ஐ.நா ஊழியர் ஒருவரின் 16 வயதுடைய மகளை விடுதலைப் புலிகள் யுத்ததிற்கு பலாத்காரமாக இணைத்துக்கொண்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

யுத்த சூனியப் பிரதேசத்தில் உள்ள சிறுவர்களைப் புலிகள் பிடிக்கச் செல்கின்ற போது அவற்றை தடுக்க முற்படுகின்ற பெற்றோருக்கும் புலிகளுக்கும் இடையில் பல தடவைகள் மோதல் வெடித்துள்ளமைக்கான பதிவுகள் உள்ளது. அவ்வாறு தடுக்க முற்பட்ட பலர் தாக்கப்பட்டும் சுடப்பட்டும் உள்ளனர் எனவும் கூறியுள்ள அவர் தொடர்ந்து பேசுகையில் அங்குள்ள மக்கள் வெறும் மண் தரையில் உட்காந்திருக்கின்றபோது அங்கு வரும் புலிகள் குடும்பத்தில் உள்ள ஓருவர் அல்லது இருவரை யுத்தத்தில் இணையுமாறு வேண்டுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

புலிகள் 12 வயது சிறுவர்களைக் கூட பிடித்துச் சென்று அவர்களது கைகளில் இயந்திரத் துப்பாக்கிகளைக் கொடுக்கின்றனர். பின்னர் அக்குழந்தைகளைக் குடுப்பத்தினாரால் பார்க்க முடிவதில்லை. யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், புலிகளிடம் அனுபவம் மிக்க உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. அவற்றை பூர்த்தி செய்ய புலிகள் சிறுவர்களை பலாத்காரமாக இணைக்கின்றனர் எனவும்,

அங்குள்ள மாணவர்கள் புலிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் பாடசாலைக்குச் செல்லும் அதேநேரத்தில் இராணுவப் பயிற்சியும் பெறவேண்டியுள்ளது. ஏறக்குறைய 200000 மக்கள் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்கின்றது. ஆனால் ஐ.நா வின் கணிப்பின் படி இன்னும் 150000 மக்கள் யுத்த சூனியப் பிரதேசத்தினுள் எஞ்சியிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது எனவும்

ஜி8 நாடுகளின் வெளிநாட்லுவல்கள் அமைச்சர்களின் கூட்டறிக்கையில், மக்களுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்கு முகமாக இருதரப்பினரம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டப்பட்டுள்ளது. ஐ.நா சபையின் உத்தியோகபூர்வ தகவல்களின் படி 2000 பேர் கடந்த மாதம் இறந்துள்ளதாக தொவிக்கப்படுகின்றபோதிலும் கடந்த வாரம் இடம்பெற்ற அதி உக்கிர யுத்தத்தின் போது இடம்பெற்ற இழப்புக்கள் இங்கு சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஐ.நா வின் இரு உத்தியோகித்தர்கள் கடந்த தை மாதம் 20 ம் திகதியில் இருந்து ஏறக்குறைய 6500 பேர் உயிரிழந்துள்ளதாக பிரத்தியேகமாக தெரிவித்துள்ளனர். யுத்தசூனியப் பிரதேசத்தில் உள்ள குழந்தைகள் சிலர் போசாக்கின்மையால் உயிரிழந்துள்ளதாக அங்குள் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

எது எவ்வாறாயினும் எந்த தகவல்களையும் ஊர்ஜிதம் செய்வது கடினமாகவுள்ளது. காரணம் இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட பிரதேசத்தினுள் ஊடகவியலாளர்களை அனுமதிக்கின்றார்கள் இல்லை. இலங்கை இராணுவத்தினர் ஒரு தொகுதி ஊடகவியலாளர்களை விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் ஆனால் படையினரின் மேற்பார்வையிலேயே அவர்களுடைய செயற்பாடுகள் இருந்துள்ளது.

மக்களை வெளியே எடுக்கும் பொருட்டு யுத்தத்திற்கு ஓர் ஓய்வு கொடுக்குமாறு சிறிலங்கா அரசை வேண்டுமுகமாக இந்தியா தனது இரு பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பியிருந்தது. ஆனால் யுத்தத்தில் வெற்றி என்பது மிகவும் அண்மித்துள்ளது என்பதை தெரிந்துகொண்டுள்ள இலங்கை அரசிற்கு புலிகளை மேலும் சுவாசிக்க விடுவதற்கு எண்ணம் கிடையாது எனவும் அவரது நீண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment