கடந்த பெப்ரவரி 10ம் திகதியிலிருந்து 10000 நோயளர்களான மக்களை வெளியேற்றியுள்ளோம். ஐசிஆர்சி.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பிரதேசத்தில் சுகவீனமுற்றும், காயப்பட்டுமிருந்த சுமார் 10,000 பொதுமக்களை கடல் மார்க்கமாக திருகோணமலைக்கு அழைத்து வந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப் பகுதியின் கணிப்பீட்டின்படியே இந்த எண்ணிக்கையானோர் அடங்குவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தெரிவித்துள்ளது.
சுமார் 23 தடவைகளில் ஒரு தடவை 400 பேர் என்ற அடிப்படையிலேயே இவர்கள் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டு திருமலை மாவட்டத்திலுள்ள திருமலை மற்றும் புல்மோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்ப்படடனர். இவர்கள் தமது தமது சங்கத்தினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கிறீன் ஓசன் கப்பல் மூலமே அழைத்து வரப்பட்டதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான மருத்துவ ஒருங்கிணைப்பாளர் மேவன் மூர்ச்சிசன் தெரிவிக்கையில், நோயாளிகளாகவும் யுத்தத்தில் காயமடைந்த நிலையிலும் நாளாந்தம் பெரும் எண்ணிக்கையிலானோர் புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அங்கும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் அங்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலை காணப்படவில்லை. அத்துடன் மருந்து வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல் சம்பவத்தில் நோயாளர்களும் வைத்தியசாலைப் பணியாளர்களும் கொல்லப்பட்டும் காயப்பட்டுமுள்ளனர்.
அண்மையில் நோயாளர்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டிருக்கும் போது இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரொருவரும் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
0 comments :
Post a Comment