Saturday, March 28, 2009

கொழும்பில் கம்பம் பெற முயன்ற இருவர் பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ளனர். ரிம்விபி யினரா எனச் சந்தேகம்.

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாவை கப்பமாக தாம் வழங்கும் வங்கிக் கணக்கில் வைப்பிலிட வேண்டும் அன்றேல் அவரது குடும்பத்துடன் கொல்லப்படுவர் என மிரட்டிய இருவர் பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தனக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரவினருக்கு வர்த்தகர் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் வழங்கிய அறிவுறுத்தலின் படி கப்பக்காரர்களை தொடர்பு கொண்ட வர்த்தகர் வங்கிக்கணக்கில் 50 லட்சம் ரூபாவை வைப்பிலிடும்போது தான் வருமானவரி சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் பணத்தை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறும் அதைத் தொடர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வேண்டியுள்ளார்.

வர்த்தகரின் வேண்டுதலுக்கு இணங்கிய கப்பக்காரர்கள் வர்த்தகர் கூறிய இடத்துக்கு வந்து வர்த்தகர் கொடுத்த பணத்தை வாங்கியபோது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனாநாயக்க தலைமையில் மறைந்திருந்த கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கப்பக்காரர்களை பணப்பையுடன் கைதுசெய்யப்பட்வர்கள்.

கைது செய்யப்பட்டுள்ள இருவரும் திருமலையை சேர்ந்தவர்ள் எனவும் இவர்கள் அண்மையில் திருமலையில் கொலை செய்யப்பட்ட வர்ஷா கொலையுடனும் கொழும்பில் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ள கப்பங்களிலும் தொடர்புடையவர்களா? ஏன விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இவர்களது திருமலை விலாசங்களை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ் குழு ஒன்று திருமலை விரைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment