திருகோணமலைச் சிறுமியின் கொலையுடன் ரிஎம்விபி யினரின் தொடர்பு மூடி மறைக்கப்படுகின்றது. JVP MP
திருகோணமலையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் கொலையுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு உள்ள தொடர்பை மூடி மறைக்க பல வழிகளாலும் முயற்சிகள் இடம் பெறுவதாக ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதை தெரிவித்த அவர் அம்முயற்சியின் ஒரு பகுதியாக திருமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டரை இடமாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இக்கொலை தொடர்பான விசாரணைகள் திருமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன அவர்களின் தலமையில் இடம்பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment