வினாயகபுரம் மகாவித்தியாலய வருடாந்த விளையாட்டுப்போட்டி.
திருக்கோவில், வினாயகபுரம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடபெற்றது. மிக நீண்ட காலமாக பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் விளையாட்டுத்திறன் முடங்கிக் கிடந்ததை அவதானித்த ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு. இனியபாரதி அவர்கள் கடந்த சில மாதங்களாக அப்பிரதேச பாடசாலை அதிபர்களை அழைத்து அவர்களுக்கு வழங்கிய ஊக்கம் இன்று அப்பிரதேசத்தில் உள்ள சகல பின்தங்கிய பாடசாலைகளிலும் விளையாட்டுப்போட்டிகள் இடம் பெற ஆரம்பித்துள்ளது.
மேற்படி பாடசாலை விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய திரு. இனியபாரதி அவர்கள் இளைஞர் யுவதிகள் தமது விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்வதற்கும், வெளிக்காட்டுவதற்கும் தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு தேவையான மேலதிக உதவிகளைப் புரிய தான் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் கூறினார். இந்நிகழ்வில் பிரதேசத்தில் உள்ள பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
திருக்கோவில் நிருபர்
0 comments :
Post a Comment