நாளை அக்கரைப்பற்று பொதுச்சந்தைக்கு அடிக்கல் நாட்டுகின்றார் முதலமைச்சர் பிள்ளையான். மக்கள் அதிருப்தி.
அக்கரைப்பற்று பொதுச்சந்தைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நாளை இடம்பெறவுள்ளது. இக்கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாளை முதலமைச்சர் பிள்ளையான் நாட்டுவார் எனவும் இவ்வைபவத்தில் கிழக்கு மாகணசபை அமைச்சர் ஹிஸ்புல்லா உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.
மேற்படி சந்தைத்தொகுதி தமிழ் மக்களால் பாரம்பரியமாக பாராமரிக்கப்பட்டு வந்ததொன்றாகும். கடந்தகால யுத்த சூழல்களால் தமிழ் மக்களின் கைகளில் இருந்து பறிபோன இச்சந்தைத்தொகுதி விடயமாக தமிழ் மக்களும் முஸ்லிம்களும் நீதிமன்றம் சென்றிருந்தபோது புலிகள் எச்சரித்ததன் நிமிர்த்தம் தமிழர் தரப்பினர் நீதிமன்றில் ஆஜராகமல் வழக்கு நேரங்களில் நீதிமன்றை புறக்கணிக்க நேரிட்டும் இருந்தது. மேற்படி சந்தைத்தொகுதி விடயமாக தமிழ் முஸ்லிம் தரபினரிடையே முறுகல்கள் ஏற்படுவதுண்டு.
இந்நிலையில் தமிழர் ஒருவர் இவ்வைபவத்தில் கலந்துகொள்வதை தமிழ் மக்கள் பலரும் விமர்சித்து வருவதாகவும் சில வேளை நாளை மக்கள் பகிரங்கமாகவே தமது எதிர்பினை வெளிக்காட்ட முடியும் எனவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment