தலைவர் பதவியை பொருத்தமான ஒருவருக்கு வழங்க தயாரக இருக்கின்றேன் என்கிறாராம் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க.
இன்று பகல் 12.10 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியன் தலைமைக் காரியாலயமாகிய ஸ்ரீ கொத்தாவில் கட்சியின் உயர் மட்டக்குழக் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமூகம் அளித்திருக்காத போதிலும் கட்சியின் தலைமைப் பொறுப்பை பொருத்தமான அல்லது கட்சி விரும்புகின்ற ஒருவருக்கு வழங்கத் தயாராக இருப்தாக அவர் தம்மிடம் தெரிவித்துள்ளதாக கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க, காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள் 24 பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிறேமதாஸ, கட்சியின் தலமைப் பொறுப்பில் இருந்து விலக தான் தயாரா இருக்கின்றேன் என்கின்ற செய்தியை ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாகவும் நேரடியாகவும் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment