புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை இலங்கை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: பிரணாப்
விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
"இலங்கையின் போர் பகுதிகளில் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கு அப்பாவி மக்கள் உயிரிழப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. இந்நிலையில், விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதை இலங்கை அரசு சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்."
என பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment