Friday, March 13, 2009

அய்யாமுல் ஜாஹிலியாக்கள் காலமும்,முஸ்லீம்களும். -முறாவோடை அச்சிமுகம்மது-

அப்போதைய அரேபியா அதாவது முகம்மது நபி (ஸல்)அவர்களுக்கு முன் அறிவிலிகளால்
நிரம்பி வழிந்தது. அதை அய்யாமுல் ஜாஹிலியாக்கள் (அறிவிலிகள்) காலம் என்பர். பெண் பிள்ளைகள் பிறந்தவுடன் சுடு மணலில் உயிருடன் புதைத்த காலமது. அவர்களைத் திருத்தி,
நல்வழிப்படுத்தி மனிதர்களாக்கிய முழுப் பெருமைக்கும் உரியவர் இந்த முகம்மது நபி அவர்கள்ஆகும். ஒரு முறை இவரிடம் ஒரு தாய் தன் பிள்ளையை அழைத்து வந்து நபியே என் பிள்ளை நிறைய இனிப்பு சாப்பிடுகின்றான். அதை நிறுத்தும் படி அவனுக்கு சொல்லுங்களேன். நீங்கள் சொன்னால் அவன் கேட்பான் எனக் கூறியுள்ளார். இவர் சிறிது நேரம் சிந்தித்து விட்டு இரண்டு நாட்களுக்கப்புறம் வாருங்கள் எனக் கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கப்புறம் சென்றவுடன் இவர் அச்சிறுவனைப் பார்த்து இனிப்பு சாப்பிடுவதைக் குறைத்துவிடு அது உடம்புக்கு நல்லதல்ல எனக்கூற சிறுவனும் அதை நிறுத்துவதாக வாக்கு கொடுத்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நபியின் தோழர்கள் ஏன் இந்த வார்த்தையை முந்தாநாளே சொல்லியிருக்கலாமே எனக் கேட்க. நானும் தினமும் அடிக்கடி இனிப்பு சாப்பிடுவேன். இந்த நிலையில் நான் எப்படி அச்சிறுவனுக்கு ஆலோசனை செய்ய முடியும். அதனால்தான் நேற்றுடன் இனிப்பு சாப்பிடுவதை நான் நிறுத்தி விட்டு இன்று ஆலோசனை செய்தேன் என்றாராம்.

அந்த வள்ளலுக்கு விழா எடுக்கப்போனவர்களிடம் தான் நமது வன்னி வித்தகர்கள் வில்லுப்பாட்டுபாடி உள்ளனர். எல்லாவற்றையும் கூட்டிக் களித்துப் பார்க்கும் போது எங்கேயோ ஒரு பொறி தட்டுது. ஆரம்பத்துல நாம் எல்லோரும் ஒருவரே. தமிழரே. தமிழ் பேசுபவர்களே. என்று சொல்லித்தானே உடல், பொருள், ஆவி எல்லாம் உங்களிடம் தந்தோம். ஆனால் மன்னார் முருங்கனில் (இங்குதான் புலி முதலாவதாக இரண்டு காக்காமாரை போட்டுத்தள்ளியது. போட்டவர்களில் ஒருவர் பிரான்ஸ் லாச்சப்பிளில் குடியும் குடித்தனமுமாக இருக்கின்றார் என்பதையும் ரொம்ப ரொம்ப தாழ்மையுடனும் பரம ரகசியமாகவும் சொல்லிக் கொள்கின்றோம் ) ஆரம்பித்து மாத்தறையில் முந்தாநாள் நடந்ததையும் வகுத்துப் பார்க்கும் போது வெள்ளரசங்கிளை எடுத்துக் கொண்டு சங்கமித்திரை வந்த கதையையும் இன்னும் படித்து முடிக்கவில்லை போல் தெரிகிறதே.

மெட்ராஸ் மூர் (எம்டபுள்ஓஆர்)மார்கட்டை எம்.ஜீ.ஆர். ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு எரித்தார்கள். இந்த குப்பைகளைப் படித்து விட்டு பிற்காலத்தில் யாராவது நாடுபிடிக்கத் தொடங்கி விடுவார்கள் என்ற நல்ல எண்ணத்தில் அந்த நல்ல மனிதர் இதை செய்வித்தார். நீங்கள் அப்போது சென்றல் ஜெயிலில் அல்லவா இருந்தீர்கள். ( ராகவன் சகோதரயோ நுங்கம்பாக்கம் நம்பர் சிக்ஸ் வஹாப்ஸ்ரீட்டுக்கு வருவதற்கு கொஞ்ச நாள் முன்னர்) அந்தக் குப்பைகளுக்குள் தான் நிறைய பழைய பஞ்சாங்கங்கள் கிடந்தது. அந்தப் புத்தகங்களை லங்காராணி அருளரும்( பொப்பாடகி மியாவின் தகப்பனார்) காந்தீயம் டேவிட் ஐயாவும் தானே வாங்கிப் படித்துக் கொண்டு திரிந்தார்கள் மன்னிக்கவும் தீப்பொறி அந்தனிஸில் ஐயாவை மறந்து விட்டேன். இந்த குப்பைகளில்தானே வாஸ்கொடகாமா கொச்சின் துறைமுகத்துக்கு கொள்ளையடிக்க வரும் போது அங்கே பாரசிகத்திலிருந்து வியாபாரத்துக்கு வந்ததொப்பி, தாடி வாலாக்கள் கிராம்புத்தைலம் தயாரித்துக் கொண்டிருந்ததாகவும் விடக்கூடாது இவர்களை விடவே கூடாது என்று கங்கணம்கட்டி கொச்சின் தொடங்கி கன்னனுர் வரை வியாபித்திருந்த சோனிகளை போட்டுத் தள்ளிய கதைகளும் இருந்தது.

அந்த புத்தகங்களில்தானே பாரசீகத்திலிருந்து காலி தங்காலையில் வந்திறங்கிய முஸ்லிம்கள் மாத்தறைக்கு வந்து கொஞ்சம் களைப்பாறி அப்படியே ஹம்மாந்தோட்டையை குறோஸ் பண்ணி கதிர்காமம் வந்து (பால்குடி பாபா ) பிபிலை கொட்டபோவவில் தொழில் தொடங்கிய கதை இருக்கின்றது. பிபிளையிலிருந்து இரு குழுவாகப்பிரிந்து ஒரு குரூப் கண்டியை நோக்கி நகர மற்றவர்கள் அம்பாறை கொண்டைகட்டுவான் ஊடாக கருங்கொடித்தீவு(அக்கறைப்பற்று), ஒலுவில், கல்முனைக்குடி, காத்தான்குடி என வந்நதாகவும், கண்டி சென்றவர்கள் இரு குழுவாகப் பிரிந்து ஒருபிரிவினர் அனுராதபுரம் ஊடாக சாவகச்சேரி (ஜாவகர் சேரி).யாழ் நல்லுர் வந்ததாகவும், மற்றவர்கள் மன்னார் திருக்கேதிஸ்வரம் மடுமாதா வரை வந்ததாகவும் உண்மையோ பொய்யோ எழுதித் தொலைத்திருக்கின்றார்கள்.

தம்பி பிரபாகரன்,இந்த காக்காமார் மன்னாரில இருந்ததற்கு சரியான ஆதாரங்ளிருக்கு, மடுமாதா அவ்வா உம்மா என்கின்ற ஒரு சோனிச்சியின்ட அடக்கஸ்தலம், இந்த காக்கா மார் சாவகச்சேரியில குடும்பத்தோட கோலோச்சியதற்கே ஆதாரம் இருக்கிது .நல்லுர் அடியிலயும் ஒரு மர்மம் கிடக்கு. அதை விபரமாக எவனும் எழுதல. திருக்கேதீஸ்வரருக்கும் கொழும்பு காக்காமாருக்கும் ஏதோ பெரிய கொடுக்கல் வாங்கல் இருக்கு. இல்லாவிட்டால் கொழும்பில் உள்ள மேமன் முஸ்லீம்கள் ஏன் இங்க அடிக்கடி வாறாங்கள். கண்டியில எண்கோண மண்டபம் ஏன் கட்டினார்கள் என்பதற்கு எந்த ராஜசிங்கனும் விளக்கம் சொல்லவில்லை.

ஆனால் பெரஹரவில போகின்ற முதல் யானை சோனிகள் அன்பளிப்புச் செய்த யானை. ராஜ சிங்கன் வெள்ளையனுக்கும் பௌத்தத்துக்கும் ஒழித்துத் திரிந்த போது ஒரு சோனகத்திதான் அடைக்லம் கொடுத்திருக்கின்றாள். ஒரு நாள் இரு நாட்கள் அல்ல பல மாதங்கள்அடைக்கலம்
கொடுத்திருக்கின்றாள் . பதினெட்டே வயதான அந்த சின்னஞ் சிறுக்கி ஒரு நாள் கூட இந்த மன்னனின் முகத்தை பார்க்கவில்லையாம். ஸைத்துன் நாச்சியார் என்ற இந்த குருத்தை பின்னாளில் (21 வயதில்) மீசை முளைக்காத ஆங்கில கேப்டன் ஒருவன் வெட்டிக் கொன்றிருக்கின்றான். கண்டி மன்னன் இறக்கும் போது “நமது பரம்பரையின் இறுதி மூச்சு இருக்கும்வரை ஸைத்துன் நாச்சியாருக்குத்தான் முதல் படையல்” என சத்தியம் வாங்கி விட்டுச் செத்திருக்கின்றான்.

மதுரை திருவண்ணாமலை பகுதியில் கடா மீசை வைத்துக் கொண்டு பம்மித் திரியும் பல பண்ணையார்கள் வருடா வருடம் கண்டிக்கு வந்து கண்டி ஆஸ்பத்திரிக்கு பின்னால் உள்ள முட்டுச்சந்திகளுக்குள்ளால் ஆறு மைல் மலை ஏறி அந்தக் குட்டி மலையில் அழுது புரண்டு தாயே நீயின்றி நாங்களில்ல அம்மா என அலறுகின்றார்கள். ஸைத்துன் நாச்சியாரை வெட்டிக் கொன்ற வெள்ளையன் பல வருடம் நோய்வாய்ப்பாட்டு சீரழிந்து இறந்ததாக பின்னாளில் நானுஓயா எடின்பரோ எஸ்டேட்டில் இருந்து கொண்டு வரலாறு எழுதிய இன்னொரு வெள்ளையன் கதை அளந்துள்ளான்.

இப்படி பல நம்பக் கூடியதும் ஆதார பூர்வமானதுமான கதைகளிருக்கு. இப்போதே சோனியை முடித்துவிடு. இல்லை என்றால் சாவகச்சேரி பலாப்பழத்துக்கு பலாக்கொட்டை கொண்டு வந்து
நாட்டியது நாங்கள்தான் எனக் கூறிக்கொண்டு ( சாவகச்சேரி பலாப்பழமும் சூடான் நாட்டில் உற்பத்தியாகும் பலாப்பழமும் கிட்டத் தட்ட ஒரே சுவை.பருமன்) காக்காமார் புதை பொருள் ஆராய்ச்சி செய்யப் புறப்பட்டாலும் புறப்பட்டு விடுவார்கள். சரித்திரம் தெரிந்த ஒரு காக்காமாரும் இருக்கக் கூடாது என ஆய்வு கூறினார்களோ என்னவோ. ஐயனே நீங்கள்தான் செத்த பிணத்தை வைத்துக் கொண்டு யாவாரம் செய்வியள். எங்களுக்கு அதுக்கு நேரமும் இல்லை. தேவையும் இல்லை.

தோண்டினால் உங்கள்ஆய்வாளர்களின்ர தலைக்குள்ள உள்ள களிமண்போல் இல்லாமல் பூதம்தான் வரும். மொத்த வெள்ளையனும் எகிப்தில போய் தோன்டிக்குத்தானே இருக்கின்றான். பிரமிட்டுகளுக்குள்ள கைக்கடிகாரங்களே ஜகா வாங்குதாமே ! ஏன் மக்கமா நகரத்தில அமைந்திருக்கிற கஃபத்துல்லா என்கின்ற அந்த குட்டி பள்ளிவாசல் உலகின் நடுமத்தியில ஆணி அறைந்தால் போல் கட்டப்பட்டிருக்கிறதே. என்ன 1400 வருடங்களுக்கு முன் முகம்மது நபி அவர்கள் இரண்டு அறளை பெயர்ந்தவர்களைக் கூப்பிட்டு, உலகின் இந்த தொங்கலில் இருந்து அந்த தொங்கல் வரை மீற்றர் தடியும் , வெள்ளைப்பேப்பரும் வைத்தா கட்டினார். நீங்கள்தான் அறளை பெயர்ந்தவர்களை வைத்துக் கொண்டு படித்த முட்டாள்கள் நாங்கள் என பம்மாத்துக் காட்டுறயள். அந்த மனிதன் படிக்காத மேதை.

ரத யாத்திரை என்ற பெயரில சும்மாகிடந்த சங்கை பாபர் மசூதி அடியில போய் அத்வானி ஐயா ஊதின கதை உங்கள் நட்டுவாங்கக் காறர்களுக்கு தெரியுமா. 700 வருடம் இந்தியாவை ஆண்ட பாபர் கோயில் கொளம், கொத்தளம், பள்ளிவாசல் என நிறைய கட்டினான். அதன் பின் அசோகன் வந்தான். அதன் பின் நிறைய கள்ளன் பொலீஸ் எல்லாம் வந்து போனார்கள். யாரும் எதையும் கண்டுக்கல. முழி எது முண்டம் எது எனத் தெரியாத அத்வானி ஐயா வந்து.அவர்ர மூக்குக் கண்ணாடிய மேலயும் கீழயும் ஆட்டிப்போட்டு ரதயாத்திரைக்கு வடம் பிடித்து பாபர் மசூதில சூல் கொண்டதின் பயனைத்தான் முந்தா நாளுக்கு முதல் டெல்லி தாஜ்ஹோட்டலில் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள்.

நாங்க பழைய பஞ்சாங்கங்கள் எல்லாவற்றையும் துக்கி வீசிவிட்டோம் இப்ப விஞ்ஞான உலகத்துக்கு வந்து விட்டோம் பிரித்வீ ஏவப்போகின்றோம் என ஊருக்கே சொல்லிவிட்டு@
இந்திராகாந்தி எயார்போர்ட் ஊடாக நான்கு விஞ்ஞானிகளை திருச்சி விமான நிலையத்துக்கு அனுப்பி திருச்சி பஸ் நிலைத்துக்கு முன்னால் உள்ள “கல்பனா லொட்ஜ்”இல் அவர்களுக்கு இரவோடிரவாக ரூமும் போட்டு ,நள்ளிரவு இரண்டரை மணிக்கு நாமக்கல் நாட்டரசன் கோட்டைக்கு டெக்சியில் போய் குடும்பிச் சாமியாரிடம் ஏவுகணைவிட சகுனம் பாhத்த லெமூரியாக்கண்ட வாசிகளின் பரம்பரைதான் நாங்கள் என்று அடம் பிடிப்பீர்களானால் உங்களுக்கு வேப்பிலை சரி வராது.

வேலுப்பிள்ளையர்ர குறிப்பெடுத்துத்தான் குறி சொல்ல வேண்டும். வல்வெட்டித்துறை வேலுப்பிள்ளையர்ர மூன்றாவது தலை முறைக்கும்,பருத்திதுறை நெல்லியடியில் உள்ள மூத்த குடிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன ? நெல்லியடிக் காறருக்கும் வட்டுக்கோட்டை அராலி கிழக்குச் சனத்திற்கும் என்ன தொடர்பு ? எல்லோரும் பொது நிறமாக இருக்க வட்டுக்கோட்டை அமிர்தலிங்கம் ஐயாவும், யோகேஸ்வரன் அண்ணாவும் எப்படி வெள்ளை வெளேர் என இருக்கின்றார்கள் ?( செல்வம் அடைக்கலநாதனை இந்த ஆட்டத்துக்கு நான் அழைக்க விரும்பவில்லை). கொழும்பில் ஆயிரம் சைவக்கடைகள் இருக்க இவர்கள் இருவரும் ஏன் கொழும்பு நுகேகொட ஹைலெவல் றோட் கேரளாக்காறன்ட கடைக்குத்தான் சாப்பிட போவோம் என அடம்பிடித்தார்கள் அந்த சாப்பாட்டுக்கட கச்சிக்காக்காவோடவும்,ஐந்த லாம்புச் சந்தியடி முஸ்லீம் ஹோட்டல் காறருடனும் திருவனதந்புரம் போய் “பீமா” மசூதியில் காணிக்கை போட்டுள்ளார்களே ஏன் ? இந்த பீமா மசூதியை அண்டிய பகுதியில் இருக்கும் கேரள பண்டாரிகளுக்கும், மாத்தறையில் அதிகமாகவசிக்கும் சிங்கள பண்டாரக்களுக்கும் என்ன தொடர்பு? கடைசியல் சுப்பர்ர கொல்லையில் போய் முடியும்

ஐயா ஆய்வாளர்களே. பிளீஸ் எங்கள விட்டு விடுங்கோ. நாங்க தெரியாம சிறிலங்காவில வந்து பொறந்துட்டோம். எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. நாங்க எதையும் பார்க்கல, எதையும் கேக்கல, எங்கள விட்டுடுங்கோ. அதோட ஒரு சின்ன வேண்டுகோள். எங்களுக்குத் தெரிந்த கொஞ்சம் சனம் கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் என்று சொல்றாங்க எங்கேயோ மாட்டிக்கிட்டதாகவும் சொல்றாங்க முடியுமானா அவங்களத் தேடிப்பிடித்து எங்களிடம் அனுப்பி வையுங்கோ.பளீஸ்.


13-03-2009

No comments:

Post a Comment