பொது நிகழ்வுகட்கு பாதுகாப்பமைச்சின் அனுமதி பெற வேண்டும்.
புலிகள் படுதோல்வியை தழுவி வருகின்ற நிலையில் பொது மக்கள் மீது மேற்கொள்கின்ற தாக்குதல்களை தடுக்கும் பொருட்டு அதற்கான தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக பொது நிகழ்வுகளுக்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் தேசிய மட்டத்தில் நிகழ்கின்ற நிகழ்வுகளுக்கு பாதுகாப்பமைச்சிலும், பிரதேசமட்டத்தில் (மாவட்டம், பிரதேசசபை, நகரசபை மட்டங்கள்) இடம்பெறுகின்ற நிகழ்வுகளுக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலும் அனுமதிகளை பெற்றுக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் இவ்வாறான அனைத்து நிகழ்வுகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment