புலிகளின் துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் ஒருவன் பலி.
முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த 58 பொது மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை புலிகளின் பிடியில் இருந்து வெளியேறி படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு பாதுகாப்புத்தேடிச் சென்றுகொண்டிருந்த போது புலிகள் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததில் சிறுவயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். எவ்வாறாயினும் அம்மக்கள் இறந்த அந்த இளைஞனது உடலத்தையும் தூக்கிக்கொண்டு படையினரது கட்டுப்பாட்டு பிரசேங்களை வந்தடைந்துள்ளனர். வந்தவர்ளில் காயமடைந்தவர்களுக்கு படையினர் உடனடி சிகிச்சையளித்து இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அக்குழுவில் 21 ஆண்கள், 15 பெண்கள், 11 சிறுவர்கள், 11 சிறுமிகள் அடங்குவதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment