கஞ்சிகுடிச்சாற்றில் படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் நெற்செய்கை ஆரம்பம்.
கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலைகளால் கஞ்சிகுடிச்சாற்றுப் பகுதியில் நெற்செய்கையில் ஈடுபடுவதற்கு படையினர் தடைவிதித்திருந்தனர். கடந்த வருடம் அப்பகுதியிலிருந்து புலிகள் விரட்டப்பட்டுள்ளதையடுத்து தற்போது அங்கு பயிற்ச்செய்கை மேற்கொள்ளக்கூடியதோர் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பிரதேச பாதுகாப்புத் தரப்பிருடன் பேச்சுவார்த்தை நாடாத்திய அம்பாறை மாவட்ட ஜனாதிபதிக்கான இணைப்பாளர் திரு. இனியபாரதி அவர்கள் நெற்செய்கை மேற்கொள்வதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டதுடன் விவசாயிகளுடன் இன்று வயற்பிரதேசங்களுக்குச் சென்று அங்குள்ள குளங்கள் மற்றும் நீர் பாயும் வாய்கால்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன் நெற்செய்கைக்கு தேவையான விதை நெல் மற்றும் உழுவதற்கு தேவையா இயங்திரங்களை சம்பந்தப்பட்ட திணைக்களங்களிடம் இருந்து பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார். அத்துடன் படையினரும் மேற்படி நெற்செய்கைக்கு பூரண ஒத்தாசை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்
0 comments :
Post a Comment