பிள்ளையானுடைய மேலுமோர் சாகாவான பிரதே சபை உறுப்பினர் சுறங்க பொலிஸாரால் தேடப்படுகின்றார்.
திருமலையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வர்ஷா வின் கொலையுடன் தொடர்பு பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான சுறங்க என்பவரை பொலிஸார் வலைவிரித்து தேடி வருகின்றனர். திருமலையில் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டோரை பொலிஸார் கைது செய்தததை தொடர்ந்து சுறங்க தலைமறைவாகி உள்ளதாக தெரியவருகின்றது.
பிரதேச சபை உறுப்பினராகிய சுறங்கவை பொலிஸார் தேடத் தொடங்கியதையடுத்து பிள்ளையான் தனது வாகனத்தில் மட்டக்களப்பு பிரதேசத்திற்கு அனுப்பி வைத்ததாக தெரியவருகின்றது. மேலும் இக்கொலையுடன் பிள்ளையானால் உருவாக்கப்பட்ட இன நட்புறவுப் பணியகத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுறங்கவிற்கு வர்ஷா போன்று 6 வயதில் சகோதரியொருவர் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment