Saturday, March 28, 2009

அடங்கா மண் நோக்கிய வணங்கா மண் -கிழக்கான் ஆதம்-

“வேறு வார்தைகளில் சொல்லப் போனால் கப்பல் மூலமாக உணவுப் பொருற்களை அனுப்ப வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஆனால் என்று அனுப்பப் போகிறோம்? எவ்வாறு அனுப்பப் போகிறோம்? என்பது முடிவாகாமல் தெளிவில்லாமல் இருக்கிறது என்று நாங்கள் பொருள் கொள்ளலாமா”? -பி.பி.சி.தமிழோசை-

தப்பு-ரேசன் வணங்கா மண் எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் தற்போதைய கால சூழ்நிலை கருதி இது சம்பந்தமாக இன்னும் எழுதவேண்டியுள்ளது. காரணம் மக்கள் விழித்துக் கொள்ளட்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக.

இங்கிலாந்தில் தொடங்கி ஐரோப்பிய நாடுகளில் வசூல் சூடு பிடித்துள்ளது உலர் உணவுப் பொருட்கள் போதியளவில் சேர்க்கப்பட்டு விட்டன இனி மருந்துப் பொருட்களே தேவை என பிரச்சாரப்படுத்தப் படுகின்றது. என்றாலும் சட்டரீதியான எந்த அனுமதியும் இதுவரை பெறப் பட்டதாக தெரியவில்லை

“அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப் புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்” -முறிந்த பனை-

என்பதற்கு ஏற்ப அவர்கள் விறு விறு என்று தலைவருக்கு தங்களின் விசுவாசத்தைக் காட்டும் நொக்கிலும் சர்வதேசத்தின் ஊடாக ஏதாவது அழுதத்தை இலங்கை அரசுக்கு கொடுத்துவிடலாம் என்ற நோக்கிலும் பிரச்சாரப் படுத்தப்படுகின்ற இந்த நடவடிக்கையானது தற்போது அந்தத் தரப்பாரினாலேயே எப்படிக் கையாள்வது என்பதில் தெளிவில்லாத நிலையிலேயே உள்ளது எனலாம்.

எப்படியாயினும் உணப்பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் மற்றும் முக்கியமான சில புலிகளின் உயிர்காக்கும் (கனரக இரும்பாலான) பொருட்களையும் எடுத்துச் செல்வதற்காகவே கப்பல் விட அவர்கள் தீர்மானித்தனர். அதை நிறுவுவதற்காக பலஸ்தீனம் நோக்கி புறப்பட்ட இடப் பெயர்வு 1947 இன்று திசை திருப்பப் பட்டு புலம்பெயர்வு 2009 ஆக மக்களை குஷிப் படுத்தியது ஆனால் தற்போது நிலமை மிகவும் மோசமாகவே உள்ளது இவர்கள் கப்பலை எங்கிருந்து நகர்த்த முற்பட்டாலும் அந்த நாடுகள் இவர்களுக்கு அனுமதி மறுக்கலாம் அல்லது இலங்கை அரசின் அனுமதியிருந்தால் மட்டுமே நாங்கள் அனுமதிப்போம் என்று கட்பாடுகள் விதிக்கலாம் அவ்வாறான சந்தர்பங்களில் கப்பல் காயித கப்பலாக நீரில் மூல்கிப்போகும் சந்தர்பமே அதிகம் உள்ளது.

காரணம் அடங்காமண் நோக்கி வணங்கா மண் புறப்பட்டாலும் அது இலங்கை அரசை வணங்கியே ஆக வேண்டும் என்பதையே சர்வதேச சட்டம் சொல்கிறது அவர்கள் இதில் சர்வதேச தொண்டுப் பணியாளர்கள் மற்றும் வைத்திய குழுக்களை ஏற்றும் பட்சத்தில் எந்த நாடும் முறையாக அனுமதிகள் இல்லாமல் அவர்களின் துறைமுகத்திலிருந்து புறப்பட அனுமதிக்க மாட்டார்கள் காரணம் அந்த கப்பலை இலங்கை அரசு தாக்கியழித்து விட்டால் அதில் பயணித்தவர்களின் உயிர்களுக்கான பொறுப்பை அந்த நாட்டு அரசுகள் சுமக்க வேண்டியேற்படும். ஆகவே ஒரு நாடு தங்கள் நாட்டிலிருந்து புறப் பட அனுமதிப்பதாயின் இலங்கை அரசின் அனுமதி பெறப்படுவது மட்டுமின்றி அது குறித்த நாட்டு அரசினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்பே அனுமதிக்க அந்தந்த நாடுகள் முற்படும் ஏனெனில் இலங்கை அரசு ஏற்கனவே அவ்வாறானதொரு கப்பல் இலங்கை கடற்பரப்பில் நுழைய முற்பட்டால் நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என அறிவித்து விட்டது.

ஆக, இலங்கை அரசின் அனுமதி கோரப்பட்டால் இலங்கை அரசு பல நிபந்தனைகளை விதிக்கும் அதாகப்பட்டது இந்திய தமிழ் நாட்டு கலைஞர் தலைமையிலான அரசு உணவுப் பொருற்களை வழங்கியதைப் போன்றதோரு வகையில்தான் இதையும் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளும். அவ்வாறு அரசுக்கு வழங்கி விட்டால் புலம்பெயர் தேசங்களில் புலிகளின் தரகர்களை எப்போதும் அந்த மக்கள் மீண்டும் ஒரு முறை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறான மிகவும் நெருக்கடியான சூழ்நிலையிலேயே அடங்கா மண் நோக்கிய வணங்கா மண் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இலங்கை அரசின் அனுமதியின்றி சர்வதேச அரசுகள் அனுமதிக்காத போது மிகவும் எளிதான ஒரு முறையை கையாளவே புலித் தரகர்கள் முற்படுவர் அதுதான் அவர்களின் நிலையையும் ஓரளவேனும் பாதுகாக்கும். அதாவது சர்வதேச எந்த அரசும் எங்களுக்கு கப்பல் புறப்படுவதற்கு அனுமதி வழங்க வில்லை எனக் கூறி கிடைத்த கலக்சனுடன் அப்படியே திட்டத்தை நிறுத்தி விடுவது அவ்வாறு செய்தால் பாவமும் பலியும் சர்வதேசத்திற்கும் இலங்கை அரசுக்கும் சென்றுவிடும் இன்னும் சிலகாலம் சந்தோசமாக புலி தரகர்களின் வாழ்வில் ஒளி வீசும்.

மாறாக வேறு வழிகளில் கப்பல் இனம் காட்டப் படாமல் வேறு பெயரில் பெறப்பட்ட அனுமதிகள் மூலம் நகர்த்த முற்பட்டால் அது இலகுவாக இலங்கை அரசால் தாக்கி அழிக்கப்படும் அல்லது சிறை பிடிக்கப்படும்.. அவ்வாறு செய்வது இலங்கை அரசுக்கும் வாய்பாக அமைந்துவிடும் காரணம் அரசு இலகுவாக நாங்கள் இந்தக் குறித்த கடற்பிரதேசத்திற்குள் உள்புக இந்த கப்பலுக்கு அனுமதி வழங்கவில்லை எனவே எங்கள் அனுமதியின்றி உயர்பாதுகாப்புள்ள கடற் பிரதேசத்தில் நுழைய முற்பட்ட கப்பல் சர்வதேசக் கடல் எல்லையில் வைத்து தாக்கி அழிக்கப்பட்ட்டது அல்லது சிறை பிடிக்கப்பட்டது எனக் கூறி நியாயப் படுத்திவிடும்.

இவ்வாறு எப்படி நோக்கினாலும் மிகவும் சிக்கலான நிலையிலேயே வணங்கா மண் நிற்கிறது இங்கிலாந்திலிருந்து கிடைக்கும் எனது நண்பரின் தகவலின் படி ஏன்டா இதை ஆரம்பித்தோம் தற்போது தன்மானப் பிரச்சினையாகி விட்டதே என்று ஏற்பாட்டாளர்கள் கருதுவதாக அறிய முடிகிறது.

எந்த இராணுவ மற்றும் இராணுவத் தளபாட உதவியையும் இலங்கைக்கு வழங்காது மனிதாபிமான உதவிகளை மட்டும் வழங்கும் (நான் சொல்லவில்லை இந்திய கடற்படைத் தளபதிதான் சொன்னார்) இந்தியாவும் அக்கப்பலையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.(இந்தியா அவர்கள் புதிகாக உருவாக்கியுள்ள உயர் தொழில்நுட்பங் கொண்ட கண்கானிப்பு கருவிகள் மற்றும் கடற் தரை வான் போர்களில் உபயோகிக்க்க்கூடிய ஆயுதங்களை புலிகளிடமே பரிட்சித்து பார்ப்பதாக சொன்னார்) ஆனால் இவர்களின் கண்களில் மண்னைத்தூவும் விதமாகவும் புலிகளின் தரகர்கள் சிந்திக்கலாம் என்பதும் இந்திய இலங்கை சீன அரசுகளுக்கு தெரியும்.

காரணம் இதுவரை அவர்களின் அமைப்பே மிகவும் தீவிரமாக சர்வதேச ஆயுதக் கடத்தல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வந்துள்ளது மற்றும் வருகிறது எனவே இவர்களிடம் பல டம்மிக் கம்பனிகள் உண்டு அவையூடாக தாங்கள் இந்தியா அல்லது தாய்லாந்து போன்ற இலங்கைக்கு மிகவும் அண்மையில் இருக்கும் நாடுகளுக்கு தங்கள் பொருட்களை சட்டப்படி எடுத்துச் சென்று அங்கிருந்து வழமைபோல தங்களின் கைவரிசையைக் காட்ட முற்படலாம்.

ஒன்றில் தங்கள் கப்பலை அவ்வாறானதோரு துறைமுகத்தில் வேறு பெயரில் வேறு அனுமதியுடன் கொண்டுவந்து நிறுத்தி விட்டு உடனே பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு கப்பல் இவ்வளவு தூரம் வந்தடைந்து விட்டது ஆகவே பக்கதிலிருக்கும் முல்லைத் தீவுக்குள் பிரவேசிக்க அனுமதிவேண்டும் என உலகெங்கும் ஆர்பாட்டங்கள், தீக் குளிப்புக்கள், உண்ணா நோம்புகள் மேற்கொள்ளப்படலாம்.

அல்லது குறித்த துறைமுகத்திலிருந்து நடப்பது நடக்கட்டும் என இலங்கை கடற்பரப்புக்குள் உள்புக முற்படலாம் இவ்வற்றில் முதலாவதை செய்யவே புலம்பெயர் புலிகள் முற்படுவர் ஆகவே இவ்வாறானதொரு செயற்பாட்டை முறையடிப்பதற்காகவே இலங்கை சர்வதேச அரசுகளுடன் இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது அண்மையில் வெளியாகும் செய்திகள் இதையே கோடிட்டு காட்டுகின்றன.

இந்த முதலாம் உக்தியை கையான்டால்தான் தங்களால் ஏற்கனவே சர்வதேசத நாடுகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கரும்புலிகளை தற்கொலைத் தாக்குதல்கள் (தீக் குளிப்பு, உண்ணாவிரதம் போன்றவற்றை) நடத்தச் செய்வதுடன் மக்களையும் மிகவும் உணர்ச்சிவசப்படுத்தி தங்களின் தலைவரைக் காப்பாற்ற இறுதி முயற்சி செய்யலாம் அதுவே அவர்களுக்கு இத்திட்டதினால் ஏற்படப்போகும் அவமானத்திலும் இருந்து பாதுகாக்கும் மற்றும் அவர்களின் கஜானாக்கள் நிரம்பியதையும் மறைத்துவிடும் சரியான திட்டம் எனலாம்.

தற்போதைய புலிகளின் நிலையை நோக்குவோமானால் வன்னியில் தலைவர் எதுவும் செய்ய முடியாது கையாளாகாத நிலையில் இருப்பது போலவே புலம்பெயர் புலிகளும் கையாலாகாத நிலையிலேயே இருக்கின்றனர். ஐரோப்பாவில் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்த ஐரோப்பிய அரசியல் தலைவர்களும் மெதுவாக புலித் தரகர்களின் அடாவடித் தனங்கள் காரணமாக மெதுவாக நழுவி வரும் நிலையில் மிகவும் பாரதூரமான அரசியல் மற்றும் தன்மான நெருக்கடிக்குள் புலம் பெயர் புலிகள் உள்ளாகியுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே பலகோடிகளை சுருட்டிக் கொண்ட தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் தங்கள் உண்மையான முகத்தை காட்டியவுடன் புலிகளின் தரகர்களின் ஒரு சாரார் நேரடியாக அவர்களைச் சாட மற்றச் சாரார் அது அவர்களின் உள்நாட்டு அரசியல் உக்தி அதை நாங்கள் குறை கூற முடியாது என இருக்கும் ஆதரவையும் இழக்க விரும்பமில்லாமல் கருத்து தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் வன்னிப் புலிகளிடம் மட்டுமல்லாது புலம்பெயர் புலிகளின் தரகர்களிடமும் கோஷ்டி சண்டைகள் ஆரம்பமாகி விட்டதானது ஈழத்தில் தமிழ்மக்கள் சர்வதிகாரப் புலிகளிடம் இருந்து விடுதலை பெறப்போகும் நாளை விரைவாக்குகிறது.

உங்கள் நாள்காட்டிகளை சரியாக கவனித்துக் கொண்டிருங்கள் விரைவில் அந்த விடுதலை புலம்பெயர் தமிழருக்கும் ஈழத் தமிழர்களுக்கும் கிடைத்துவிடும் அணையப் போகும் தீபம் இறுதியில் பிரகாசமாக எரியும் அந்த பிரகாசத்தை விரைவில் புலிகளிடமும் நீங்கள் கானலாம் ஆனால் அதைக் கண்டு ஏமார்ந்து விடாதீர்கள்! ஜாக்கிருதை.. சில உண்டியல்காரர்கள் தங்கள் உண்டியலை தயாராக வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள் அந்த பிரகாசத்தில் தங்கள் இறுதி கலக்சனையும் முடித்துக் கொள்வதற்காக.

“மழை வழங்கும் வானமே நீ வாழ்க" என்று நான்கு திசைகளும் வானத்தை வாழ்த்தின.

காற்றுக்குச் சினம் பொங்கியது.

‘என்ன கொடுமை! வானமா வழங்கியது?"

பூமிக்காகக் காற்று பொருமியது:-

“நீர் கொடுப்பதோ பூமி பேர் எடுப்பதோ வானம்” –காசி ஆனந்தன்-



No comments:

Post a Comment