எந்த வித முன்நிபந்தனைகளும் இல்லாமல் பேச தயாராக இருக்கின்றோம். படையினரின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியவில்லை. பா. நடேசன்.
படையினர் மேற்கொள்ளுகின்ற தாக்குதல்களை எம்மால் தாங்க முடியவில்லை அவர்கள் எம்மால் தாங்கமுடியாத ஓர் நிலையை தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் நாம் ஓர் யுத்த நிறுத்தம் வேண்டி உரத்துக் கத்திக்கொண்டிருக்கின்றோம் எனவும் எமது வேண்டுகோளை அரசு நிராகரித்து வருகின்றது எனவும் பிரித்தானிய சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் புலிகளின் அரசியல் துறைப் பேச்சாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் புலிகள் எவ்விதமான முன்நிபந்தனைகளும் இல்லாமல் அரசுடன் பேச தயாராக இருப்பதாகவும் சர்வதேச கண்காணப்பாளர்கள் தமது நிலமைகளை நேரில் வந்து பார்வையிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment