புதுமாத்தளன் பாடசாலையில் காயப்பட்ட புலிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
வன்னியின் முழு நிலப்பரப்பையும் தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் படையினர் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றனர். இவ் யுத்தத்தில் புலிகள் தம்மிடமிருந்த 90 சதவீத நிலப்பரப்பையும் வளங்களையும் இழந்துள்ள நிலையில் சிறியதோர் பிரதேசத்தினுள் முடங்கி நின்று யுத்தம் புரிந்து வருகின்றனர்.
இறுதியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையும் படையினர் வசம் வீழ்ந்துள்ள நிலையில் தற்போது காயமடைகின்ற புலிகளுக்கு புதுமாத்தளன் பாடசாலையில் வைத்து சிகிச்சையளிக்கப்படுவதாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறி விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு வந்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment