புலிகள் நிர்வகித்து வந்த பாரிய சிறைச்சாலை.
புதுக்குடியிருப்பு தெற்கு பிரதேசத்தில் புலிகள் நிர்வகித்து வந்த பாரிய சிறைச்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அச்சிறைச்சாலை புலிகளின் பிரதேசங்களில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட மற்றும் கட்டாய போராட்ட வேலைகளில் ஈடுபட மறுத்த பொது மக்களையே அங்கு அடைத்து வைத்துள்ளனர் என்பது தெரியவந்ததுள்ளது.
அங்கு தடுத்து வைத்திருந்த மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இருக்கவில்லை என்பது, அச் சிறைச்சாலைக்கென ஒரு சமையல் கூடமோ அன்றில் ஒழுங்கான மலசல கூடங்களோ அங்கு காணப்படவில்லை என்பதிலிருந்து தெரியவருகிறது. உணவு வழங்கலை எடுத்துக்கொண்டால் அவை வெளியிடத்தில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்தாலும் கூட இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவை ஒழுங்காக வழங்கப்பட்டிக்குமா என்பது கேள்வியே!
0 comments :
Post a Comment