புலிகளின் பிஸ்டல் குழு தலைவர் சுட்டுக்கொலை
மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னக்குடா வீதி அல் ஜுப் ரிய்யா பாடசாலை வீதியில் நேற்று முன்தினம் (05) இரவு 9.15 மணியளவில் பொலி ஸார் மேற்கொண்ட துப்பா க்கிப் பிரயோகத்தில் புலிகள் இயக்க பிஸ்டல் குழுத் தலைவரெனக் கருதப்படும்
நவநீதன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச் சடலத்துடன் பிஸ்டல், கைக் குண்டு சயனைட் மற்றும் ரவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். டி. சந்திரபால தெரிவித்தார்.
இச் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்குச் செல்லும் புகையிரத வண்டியை பரிசோதனை செய்த பின்னர் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் செல்ல முற்பட்ட நபரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகப் பொலிஸார் கூறினர். கல்முனை கோயில் வீதியைச் சேர்ந்த சாமித்தம்பி செந்திவன் எனக் குறிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையொன்று இவரிடம் காணப்பட்டது.
0 comments :
Post a Comment