Saturday, March 14, 2009

தப்பு-ரேசன் (ஓப்புரேசன்) “வணங்கா மண்” -கிழக்கான் ஆதம்-


“அன்பில்லாத முகங்களையும் அறிவில்லாத செயல்களையும் எனக்குப் பிடிக்காமல் போனதில் வியப்பில்லை என்றே எண்ணுகிறேன்" –பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்-

புலம் பெயர் தமிழர்களின் தலையில் பல முறை மாவரைத்த புலம் பெயர் புலிகள். தங்களின் ஆடம்பரத் தேவைக்கான பணத்தை முன்னர் ஒவ்வோர் போர்களின் பெயரைச் சொல்லி பெற்றதைப் போல தற்போது எதையும் பெறமுடியாது உள்ளதுடன் புலிகளின் ஆடம்பர வாழ்கை அம்பலமானதால் மக்கள் மிகவும் சலித்துப் போய் விட்டார்கள். அவர்களின் மனவுலச்சலைப் போக்க தலைவரால் எந்த யுத்த வெற்றியையும் தர முடியாமல் போகவே எப்படி மக்களின் பணம் கறப்பது என நிதிப் பொறுப்பாளர்கள் ஒரு திட்டம் தீட்டினர்.

அப்பொழுது அவர்களின் ஞாபகத்தில் வந்தவர்தான் பழ. நெடுமாறன் உடனே யுக்தியும் கிடைத்து விட்டது. அதுதான் தப்பாக அனுபப்படுவதாக கூறப்படும் தப்பு ரேசன் வணங்கா மண். ஏன் பழ.நெடுமாறனை நினைத்தவுடன் இது அவர்களின் பொறியில் தட்டியதென்றால் அவர்தான் ஈழத்துக்கு படகில் சாமான் அனுபப் போகிறோம் யார் தடுத்தாலும் எங்கள் பயணம் தொடரும் என்றெல்லாம் கூறி பல இலச்சங்களையும் பல இலச்சத்திற்கான பொருற்களையும் தமிழ் நாட்டு அப்பாவி மக்களிடம் இருந்து திரட்டி கடைசியில் அரசு அனுமதிக்கவில்லை என்று கூறி அனைத்துப் பொருற்களையும் தனது பிணாமிகளின் மளிகை கடையில் விற்றும் அத்துடன் பணத்தை சுருட்டியும் கொண்டார்.

அதே பாணியை பின்பற்றி சகல புலம் பெயர் உறவுகளின் பணத்தையும் அரைவாசியை சுருட்டிக் கொண்டு மற்றைய அறைவாசியை இலங்கை அரசுக்கு வழங்கப்படப் போகிறது இதை உன்னிப்பாக கவனிப்பீர்களானால் விளங்கும். கடந்த காலங்களில் பல பிணாமிகளின் பெயரில் சேர்க்கப்பட்ட பணம் புலிகளுக்கு ஆயுதம் வாங்குவதற்கும் மற்றும் உல்லாசமான பங்கர்கள் அமைப்பதற்குமே பயன்பட்டுள்ளது அதிலும் வாங்கிச் சேர்த்த ஆயுதங்களில் அரைவாசிக்குமேல் இன்று இலங்கை அரசுக்கு இலவசமாக தலைவர் வழங்கியுள்ளார். அதனை பயண்படுத்தி இன்னம் இரண்டு இராணுப் பிரிவை அமைக்க முடியும் என கொத்தபாய ராஜ பக்ச தெரிவித்துள்ளார்.

இது வரை சேர்க்கப்பட்ட நிதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் சில புலிகளின் பினாமி அமைப்புக்களின் நிதிகள் சர்வதேசத்தாலும் இலங்கை அரசாலும் முடக்கப்பட்டு அப்படியே இலங்கை அரசின் யுத்தச் செலவுக்காக வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது இந்தியா ஊடாக நிதிப் பரிமாற்றம் மற்றும் இலங்கைப் பொருள் புறக்கணிப்பு என எத்தனையோ வகைகளில் இந்தியாவுக்கும் இலங்கை இராணுவத்திற்கு செய்யும் செலவுகளையும் விடுதலைப் புலிகளின் பிணாமிகளே மறைமுகமாக இதுவரை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் மட்டுமே சில மில்லயன் டொலர்களை இந்தியா, தாய்லாந்த், பாக்கிஸ்தான் மற்றும் சில அரசுகளுக்கு நிதிப் பரிமாற்றம் மற்றும் பண்ட மாற்று அந்தந்த நாடுகளின் ஊடாக செய்வதனால் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர் பணம் நமக்கெதுக்கு என அந்தந்த நாடுகளும் அவற்றை இராணுவ மற்றும் பொருளாதார உதவியாக அந்தந்த நாடுகளும் இலங்கை அரசுக்கு அவற்றை திருப்பி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு தாங்களே மக்களின் பணத்தில் அரசுக்கு சகல உதவிகளையும் வழங்கி விட்டு. மக்களைக் கூடி பொருளாதார தடைக் கோஷம் “ Boycott Srilanka”.இவ்வாறு தங்களின் செயல்களுக்கும் மூலைக்கும் சம்பந்தமில்லாமல் செயற்படும் இவர்களின் புதிய கோஷம் இன்னும் மக்களை மடையராக்கும் என்றே எதிர்பார்கின்றனர். அண்மையில் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் சாபாரத்தினம் செல்லத்துரை (தமிழந்தி) இராணுவத் தாக்குதலில் இறந்துள்ளதனால் இன்னும் சில ஐரோப்பிய பண முகவர்கள் இலாபமடைந்துள்ளனர். இவ்வாறு மக்களின் பணத்தில் உள்ளாசமாக வாழும் இவர்களின் அடுத்த கலக் சன்தான் வணங்கா மண்.

இந்த கப்பல் கிளிநொச்சிக்கு நேரடியாக அனுப்பும் விடயம் சாத்தியம் தானா என்று யோசிக்காமலே சில மாடுகள் தலையசைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் கப்பல் மூலம் இரண்டு வகையான இலாபங்கள் புலிகளின் பினாமிகளுக்கு கிடைக்கப் போகிறது
ஒன்று- கப்பல் என்ற பெயரில் பெருமளவிலான பணம் மற்றும் பொருற்களை திரட்டி விட்டு ஏதோ சாட்டுப் போக்கிற்கு ஏதோ கொஞ்சம் சாமானை உள்ளே வைத்து இலங்கைக்கு அனுப்பிவைப்பது அது அரசால் பறிமுதல் செய்யப்படும்போது அரசின் பெயரைச் சொல்லி பணத்தையும் மீதிப் பொருற்களையும் சுருட்டிக் கொள்வது

இரண்டாவது- உணவு மற்றும் மருந்துக் கப்பல் என்ற பெயரில் தலைவரைக் காப்பதற்கு அவசியமான கருவிகளையும் சேர்த்து ஒரு பினாமிப் பெயரில் அனுப்பிவைப்பது அரசு கைப்பற்றினால் அப்படியே விட்டு விடுவது. (இவை கப்பல் என்ற ஒன்று அனுப்பினால் மாத்திரமே. ஆனால் சாத்தியங்கள் அப்படி எதுவுமே அனுப்ப பட மாட்டாது போலவே தெரிகிறது.)

இவ்வாறு எந்த வழியில் இவர்கள் செயற்பட்டாலும் அது அரசால் பறிக்கப் படவே செய்யும் அதற்கான சிக்னலாகவே இராணுவப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வல “ எந்த சர்வதேசத்தின் கப்பலும் அரசின் அனுமதியின்று இலங்கை கடற் பரப்பில் அனுமதிக்கப்பட மாட்டாது” என்று நேற்றைய முன்தினம் தெரிவித்தார்.

இலங்கை அரசு மட்டுமல்லாது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான், சீனா தாய்லாந்து போன்ற நாடுகளும் இவர்களின் கப்பலில் எச்சரிக்கையாகவே செயற்படப் போகின்றன.
ஆக அனுப்ப முடியாத கப்பலுக்கு சூராவளிப் பிரச்சாரத்தில் பணம் பொருள் சேர்ப்பது தங்களின் பொருளாதாரம் மீட்சி கருதியது எனவும் விளங்கிக் கொள்ளலாம். இதையே பழ.நெடுமாறனும் பல தடவை செய்துள்ளார். இருக்கிற புலம் பெயர் மக்களையெல்லாம் மடையராக்கி பெரும் பணம் திரட்டி படையெடுக்கப் போவதாக கூறும் இந்த முட்டாள்களுகளின் வலையில் இனி புலம் பெயர் மக்கள் விழ மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஏனெனில் இப்படி நேரடியாக முல்லைத்தீவுக்கு கப்பல் அனுப்புவது இலங்கையை விடபெரிய மாணில அரசாக இருக்கும் தமிழ் நாட்டு அரசுக்கு கூட முடியவில்லை. அவர்களே செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக இலங்கை அரசிடமே ஒப்படைக்க வேண்டிவந்தது.
ஏன் ஜெயலலிதா சில நாட்களுக்கு முன்னால் திரட்டிய நிதிக்கும் இதே நிலமைதான்.
ஆக சாத்தியமில்லாத ஒன்றுக்காக புயல் பிரச்சாரம் செய்யப் படும்போது எங்கோ உதைப்பது மக்களுக்குப் புரியும்.

வன்னியில் அல்லலுரும் மக்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருற்களை பார்சலில் வைத்துக் கொண்ட ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களே அரசின் அனுமதிக்காக காத்துக் கிடக்கின்றன. எனவே இவர்களுக்கு மட்டும் எப்படி சாத்தியம் என்பது தெரியாது. மட்டுமல்லாது இவர்கள் யாரிடம் அதற்கான அனுமதி பெற்றார்கள் என்றும் தெரியாது.

புலிகளின் பினாமிகளே முடிந்தால் நீங்கள் பெற்ற அனுமதிப்பத்திரங்களின் விபரங்களை கொஞ்சம் உங்கள் ஊது குழல்கள் ஊடாக வெளியிடுவீர்கள் ஆனால் நாங்களும் உங்களின் கப்பலில் அல்ல்லுரும் மக்களுக்கா பொருற்கள் அனுப்பத் தயார்.என்றாலும் நன்றி நீங்கள் கப்பல் அனுப்ப மாட்டீர்கள் அப்படியும் அனுப்பினாலும் இலங்கையின் கஸ்டப் படும் மக்களைப் பற்றி ஒரு முறையேனும் சிந்தித்து நீங்கள் திரட்டியதில் பத்து வீதத்தை (10%)யேனும் அனுப்பி அரச களஞ்சியத்தை நிறைப்பதற்கு.

புலிகள் அழித்த மக்களின் உயிர்களுக்கும் உடமைகள் செல்வங்களுக்கும் நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் நிகராகப் போவதில்லை என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கப்பலைக் காத்துக் கொண்டுதான் சில களுகுகள் இலங்கை இந்தியக் கடற் பிரதேசத்தில் நிற்கின்றனவாம். அனுப்பிவையுங்கள் முடியுமானால் நீங்கள் அதில் சேர்ந்து சென்றால் நீங்களே மக்களுக்கு நேரடியாக வினியோகிக்க உதவியாக இருக்கும்.

அத்துடன் அந்த வினியோகத்தின் பின் புலம் பெயர் மக்களும் தங்களை மிரட்ட இனி யாரும் இல்லை என்று நிம்மதிப் பெரு மூச்சு விடுவர்.

'ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு - இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு!' - பட்டுக்கோட்டையார் –


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com