Sunday, March 15, 2009

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டவர்களில் பிரபாகரனின் மகள் துவாரகா என படையினர் சந்தேகிக்கின்றனர்.



கடந்த மாதம் 24ம் திகதி பருத்திதுறைக் கடலில் 20 மைல்கல்களுக்கப்பால் தத்தளித்துக்கொண்டிருந்த படகொன்றை படையினர் மீட்டிருந்தனர். அப்படகில் இருந்து படையினர் மீட்ட மக்களுள் மிகவும் அழககாவும் பிரபாகரனின் மனைவி மதிவதினியின் இளமைத் தோற்றத்தையும் ஒத்தாகவும் காணப்பட்ட யுவதி ஒருவரை அவதானித்த படையினர் அவர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரபாகரனின் மகள் துவாரகாவின் சிறுபிராய புகைப்படங்களில் இருந்து சகல படங்களுடனும் மேற்படி யுவதியை ஒப்பிட்டு விசாரணைகளை படையினர் முடக்கி விட்டுள்ளனர்.

மேற்படி படகில் தத்தளித்துக் கொண்டிருந்த மக்கள் தாம் வன்னியில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு செல்கையில் காலநிலைக் கோளாறு காரணமாக தம்மால் தொடர்ந்தும் பயணிக்க முடியாமல் நடுக்கடலில் நிர்கதியாகியதாகவும் தமக்கும் புலிகளுக்கும் தொடர்புகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரனின் மனைவி 10 வயதான பாலச்சந்திரன் எனும் கடைசி மகனுடன் வெளிநாடொன்றில் வாழ்வதாகவும் பிரபாகரன் சர்வதேச கடற்பரப்பில் உள்ள கப்பல் ஒன்றில் வாழ்வதாகவும் வெளிநாட்டு புலனாய்வு துறை நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதே நேரம் பிரபாகரன் வன்னியிலேயே நிலைகொண்டுள்ளதாக வன்னியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா தெரிவத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com