கல்முனை கொழும்பு பஸ் தீக்கிரை.
இன்று அதிகாலை கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்வண்டியை நாவலடிச் சந்திக்கு அண்மையில் மறித்த இனந்தெரியாத நபர்கள் வண்டியிலிருந்த பயணிகளை இறக்கி விட்டு பஸ்சிற்கு தீ மூட்டியுள்ளனர். ஸ்தலத்திற்கு விரைந்த படையினர் தீயை அணைத்துள்ள போதிலும் அதன் உட்பகுதியும் இயந்திரப் பகுதியும் முற்றாக எரிந்த சேதமாகியுள்ளதாக தெரியவருகின்றது.
பொலிஸாரும் படையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment