பட்டிருப்பு பிரதேச தலைவருக்கு பிள்ளையான் கொலை மிரட்டல்.
களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு பிரதேச தலைவர் கண்ணன் என்பவருக்கு முதலமைச்சர் பிள்ளையான் கொலை அச்சுறத்தல் விடுத்துள்ளதாக தெரிவருவகின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பல முன்னணி உறுப்பினர்கள் பொது ஜன ஐக்கிய முன்ணியில் இணைந்துள்ள நிலையில் தற்போது பிள்ளையான் தலமைதாங்குகின்ற அவ்வியக்கத்தில் இருந்து பலர் பொ.ஜ.ஐ முன்னணியுடன் இணைய முனைந்து வருவதாக தெரியவருகின்றது.
அவ்வாறே, பட்டிருப்பு பிரதேச சபைத் தலைவர் கண்ணன் அவ்வியக்கத்தில் இருந்து விலகி பொ.ஜ.ஐ முன்னணியுடன் இணைய முனைவதை அறிந்த பிள்ளையான் கண்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகவும் அவரது ஆயுததாரிகளை கண்ணனது வீட்டிற்கு அனுப்பி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கண்ணனுக்கு நெருக்கமானவர்கள் ஊடாக வெளிவந்துள்ளது.
0 comments :
Post a Comment