கடற்கரும் புலிகளின் முகாம் ஒன்று படையினர் வசம்.
வன்னியின் முழு நிலப்பரப்பையும் தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து புலிகளின் பிடியில் உள்ள மக்களை மீட்கும் பொருட்டு பிரிகேடியர் ஷாவேந்திர சில்வா தலைமையில் முன்னேறும் 58ம் படையணியின் கீழ் செயற்படும் 7ம் சிங்க ரெஜிமென்ட் இரணைப்பளைப் பிரதேசத்தில் கடற்கரும் புலிகளின் முகாம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
இரணைப்பளைப் பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியினுள் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றின் மத்தியிலேயே இம் முகாம் காணப்பட்டுள்ளது. இம்முகாமில் கடற்புலிகளின் தளபதிகள் கடற்கரும்புலிகளுக்கான பயிற்சி வழங்கியுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என களமுனையில் உள்ள ஐரிஎன் விசேட நிருபர் தெரிவித்துள்ளார்.
அம்முகாமில் அதிவலு கொண்ட இயந்திரங்கள் பூட்டிய வள்ளங்கள் காணப்படுவதாகவும் அவை கடற்கரும்புலிகள் தமது இலக்குகளை இலகுவாகவும் வேகமாகவும் அடைய கூடியவாறு வடிவமைக்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள படையினர் அங்கிருந்து பல தற்கொலை அங்கிகளையும் மீட்டுள்ளதாக கூறுகின்றனர்.
0 comments :
Post a Comment